Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Monday, August 19, 2019

என்னடா... என் கல்விக்கு வந்த சோதனை...

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups

என்னடா... என் கல்விக்கு வந்த சோதனை...

வட்டார வள மையத்தை இணைத்தால் அரசு பள்ளியில் கல்வி தரம் உயரும்...
பள்ளிகளை இணைத்தால் அரசு பள்ளியில் கல்வி தரம் உயரும்....
அதிக அளவில் பதிவேடுகள் பராமரித்தால்
அரசு பள்ளியில் கல்வித்தரம் உயரும்....
ஆங்கில வழிக்கல்வி முறையை அறிமுகம்
செய்தால் அரசு பள்ளியில் கல்வித்தரம் உயரும்...


பள்ளிகளை மூடி நூலகம் திறந்தால் அரசு பள்ளியில் கல்வித்தரம் உயரும்....
இணையதளத்தில் அமர்ந்து கொண்டு எந்நேரமும் தகவல்களை பதிவேற்றம் செய்து கொண்டிருந்தால் அரசு பள்ளியில் கல்வித்தரம்
உயரும்...
அருகாமையில் உள்ள தனியார் பள்ளியில் 25 சதவீதம் இடஒதுக்கீடு கொடுத்தால் அரசு பள்ளியில் கல்வித்தரம் உயரும்.....
ஆசிரியர்கள் கைரேகை வருகை பதிவு மேற்கொண்டால்
அரசு பள்ளியில் கல்வித்தரம் உயரும்....
எப்போது அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்கள் சூழ்நிலையினை கருத்தில் கொள்ள
போகிறார்கள்? ஆசிரியர்களை பழிவாங்குவதாய் நினைத்துக் கொண்டு மாணவர்களின் எதிர்காலத்தோடு விளையாடுவதை
எப்போது உணர போகிறார்கள்?


பிற வேலைகளை தவிர்த்து
மாணவர்களுக்கு பாடம் மட்டும் நடத்த ஆசிரியர்களுக்கு எப்போது சுதந்திரம் தர போகிறார்கள்?
இன்றைய அதிகாரிகள் அனைவரும் அன்றைய அரசு பள்ளி மாணவர்கள்தானே!
அன்று
மாணவனை மகுடமாக்கும் அதிகாரம்
ஆசிரியரிடம் இருந்தது...
இன்று மாணவனின் எதிர் காலத்தை மழுங்கடிக்கும் அதிகாரம் அரசாங்கத்திடம்.... எப்படி கல்வித்தரம் உயரும்... வெறும் கட்டிடங்களில் அல்ல கல்வித்தரம்... கல்வியை மூலதனமாக எண்ணாமல்
செலவீனமாக எண்ணும் அரசாங்கம் இருக்கும் இடத்தில் கல்வி
தரமானதாக அல்ல.... கட்டாந்தரையாகக்
கூட இருக்க வாய்ப்பு இல்லை....🔥🔥🔥 - - ஆசான்

Post Comments

Popular Feed

Recent Story

Featured News

Back To Top