அரசாணை எண் :165 பள்ளிக்கல்வி துறை நாள் : 17.09.2019 நீதிமன்றத்தின் நிறுத்திவைப்பு உத்தரவு...
எத்தனையோ வழக்குகளில் தனி நீதிமன்றங்கள், டிவிசன் பெஞ்ச் மற்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும் அதனை அரசு நிறைவேற்றுவதில்லை.
நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்து, கல்வித்துறை செயலாளரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பிறகே, நீதிமன்றங்களின் உத்தரவை நடைமுறைப்படுத்த அரசு முன்வருகிறது.
ஆனால் ஒரு வழக்கில்.. நீதிமன்றம் பிறப்பித்த ஒரு இடைக்கால உத்தரவை அடிப்படையாக வைத்து, அதனைத் தமிழகம் முழுவதும் உடனடியாக நடைமுறைப்படுத்த பொதுவிதியாக ஏற்படுத்திய அரசின் புலிப்பாய்ச்சல் வேகம் நீதிமன்றத்திற்கு ஆச்சரியத்தை அளிக்கிறது..
அரசாணை 165 யை எதிர்த்து ஒருவருமே வழக்கு எதனையும் தாக்கல் செய்யவில்லை என்பதால், அந்த அரசாணைக்கெதிராக நீதிமன்றம் உத்தரவு எதனையும் பிறப்பிக்க முடியாது என்றஅரசின் வாதத்தை நிராகரித்த நீதியரசர்கள் சிவஞானம் மற்றும் தாரணி அடங்கிய டிவிசன் பெஞ்ச் அரசின் உத்தரவை சஸ்பெண்ட் செய்து ஆணை பிறப்பித்தது.
இடைக்காலத் தடை விதிக்காமல்.. அரசாணையையே நீதிமன்றம் சஸ்பெண்ட் செய்திருப்பது பாராட்டிற்குரியது.. வரவேற்கத்தகுந்தது..
இதன்படி தமிழகம் முழுவதும் ஆசிரியர்களின் நியமனத்திற்கும்.. பணிநிரவலுக்கும் தமிழக அரசு முன்தேதியிட்டுப் பிறப்பித்த உத்தரவு நடைமுறைப்படுத்தப்பட முடியாததாகிவிடுகிறது..