Tuesday, September 24, 2019

விழுப்புரம் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் அவர்களுக்கு

விழிமா நகரின் விழிப்புணர்வு நாயகரே!!

விடை பெறும் மழைதனை
மரம் வைத்து அழைப்பவரே !!!

சிதம்பரம் வட்டத்தில் கல்வியைப் பயின்றவரே!!

சிறப்பான பணியாலே விழுப்புரத்தை உயர்த்தியவரே!

பசுமரத்தின் அனுபவம் உம் ஊரில் கொண்டவரே!!

பாரினை பசுமையாக்க நடை போடும் வல்லவரே!!

பசுமைப்பள்ளிகளை உருவாக்கும் உத்தமரே !!

காமராசர் பிறந்த நாளில் சபதம் கொண்ட சான்றோரே!!

மரக்கன்றை மண் புதைத்து மரம் காணும் வித்தகரே!!!

லட்சம் மரங்களை நோக்கிடும் லட்சிய நாயகரே!!

கோடிகளும் சாத்தியமே

வளர்த்தெடுப்போம் வனமொன்றை!!

மாணவர்களிடம் சேரட்டும்!! மரக்கன்றுகள் உம் கையால் !!!

மாணவர்கள் கைப்பட்டதும்

மரமாகும் விந்தை காண்பீர் !!

பள்ளிகள் எல்லாம் பசுமைக்குடிலாகும் !!

பாரததேசமே பசுமை பூமியாகும்!!

பசுமை பூமியாய் பாரெல்லாம் சிறந்திட!!

தூய காற்றே உயிர்களின் தேவையாம்!!

துடிப்புடன் நடந்திடும் உங்கள் சேவையால்!!

இயற்கை சூழலில்

உயிர்களின் வாழ்க்கையாம்!

இதயம் மகிழ்ந்தே உம்மையும் வாழ்த்துமே!!

இளமை மாறா வளமுடன்

வாழ்க வென்றே!!

தொடங்கிய சேவை தொடர்ந்திடும் சேவை!!

உங்கள் சேவையில் நாங்களும்

துணை உண்டே!!

உலகம் நிலைபெற தேவையும் கொண்டு!!

மழையும் ,வளமும்,

வாழ்க்கைச்செழிப்பும்

உம்மால் நிகழ்ந்திடும் அற்புதம் தானே. . .

ஆண்டவன் அருளால் நலமுடன் வாழ்வீர்!!

ஆண்டுகள் நூறும் தாண்டியே வாழ்வீர்!!

அறப்பணி அதனை அனுதினம் செய்வீர்!!

உலகம் வாழ

நல்வழி காண்பீர். . .

உங்கள்

பார்வை பட்டால் பாலைவனம் பசுமையாகும்

உங்கள் கால்பட்டால்

விழுப்புரமும் சோலையாகும் !!

மழைக்காலத்தில் வந்து !!

மரக்கன்றுகள் தந்து!!

எங்கள் மனம் கவரும் நீங்கள் !!

உங்களை மகிழ்ந்து வாழ்த்துவோம் நாங்கள்!!

விழுப்புரம் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் ஐயாவுக்கு

நன்றி! நன்றி !நன்றி!



💐💐💐வாழ்த்துகளுடன் 💐💐💐

க.மகேஸ்வரன்
பட்டதாரி ஆசிரியர் (தமிழ்)
விழுப்புரம் மாவட்டம்

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News