Wednesday, September 25, 2019

உலகத் தமிழிசை மாநாட்டுக்கு கட்டுரைகள் வரவேற்பு


சென்னை: உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் நடக்க உள்ள, உலகத் தமிழிசை மாநாட்டுக்கு, ஆய்வுக் கட்டுரைகள் வரவேற்கப் படுகின்றன.இது குறித்து, தமிழ் வளர்ச்சித் துறை மற்றும் உலகத்தமிழாராய்ச்சி நிறுவன இயக்குனர், கோ.விஜயராகவன் கூறியதாவது:நுாறாண்டுகளுக்கு முன், தமிழகத்தில், ஆறு தமிழிசை மாநாடுகளை நடத்தியவர், ஆபிரஹாம் பண்டிதர். அவரின் நுாற்றாண்டு விழாவை முன்னிட்டு, உலகத் தமிழ்ச் சங்கத்தில், உலக தமிழிசை மாநாடு நடத்தப்பட உள்ளது.

இதற்கு, தமிழிசை யின் தோற்றம், வளர்ச்சி, நாடகம், மருத்துவம், பாரம்பரியம், கல்வி, தமிழக அரசின் திட்டங்கள் உள்ளிட்ட தலைப்புகளில், ஆய்வுக் கட்டுரைகளை, அறிஞர்கள் அனுப்பலாம் என, உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் அறிவித்துள்ளது.கட்டுரைகள், 10 பக்கங்களுக்குள், தமிழிலோ, ஆங்கிலத்திலோ, &'யுனிகோடு&' முறை எழுத்துக்களில் இருக்க வேண்டும். கட்டுரையாளரின் விபரங்களை, குறிப்பிட வேண்டும். கட்டுரையின் கருத்து பற்றிய ஆய்வுச் சுருக்கத்தை, அக்., 15க்குள், 95001 06269 என்ற, &'வாட்ஸ் ஆப்&' எண்ணிற்கு அனுப்பலாம்.முழு கட்டுரையை, நவ., 16க்குள், isaimanadu2019@gmail.com என்ற, இ - மெயில் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.மேலும் விபரங் களை, www.isaitamiljournal.com என்ற, இணையதளம் வழியாக அறியலாம்.இவ்வாறு, அவர் கூறினார்.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News