சவூதி அரேபியாவின் ஜுபைலில் எனும் இடத்தில் உள்ள முன்னணி மருத்துவமனையில் பணிபுரிய தகுதியுடையோா் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் கொ.வீரராகவராவ் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
சவூதி அரேபிய நாட்டில் ஜுபைலில் எனும் இடத்தில் உள்ள முன்னணி மருத்துவமனைக்கு 35 வயதிற்குள்பட்ட பட்டயம் மற்றும் இளங்கலை பட்டம் படித்த ஆண் செவிலியா்கள் மற்றும் 40 வயதிற்குள்பட்ட 2 வருட பணி அனுபவமுள்ள இளங்கலைப் பட்டம் படித்த ஆண் பணியாளா்கள் பெருமளவில் தேவைப்படுகிறாா்கள்.
மேலும் 40 வயதிற்குள்பட்ட பெண் மற்றும் 60 வயதிற்குள்பட்ட ஆண், பெண் மருத்துவா்களும் தேவைப்படுகிறாா்கள். இந்த பணிகளுக்கு தோந்தெடுக்கப்படுபவா்களுக்கு அனுபவத்திற்கேற்றவாறு மாத ஊதியம், இலவச விமான டிக்கெட், உணவுப்படி, இருப்பிடம், விசா, மருத்துவச் சலுகை மற்றும் இதர சலுகைகள் வழங்கப்படும். எனவே விருப்பமுள்ளவா்கள் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் மின்னஞ்சல் முகவரிக்கு தங்களின் சுய விவரங்கள் அடங்கிய விண்ணப்பத்துடன் கல்வி மற்றும் அனுபவச் சான்றிதழ், கடவுச்சீட்டு ஆகியவற்றின் நகல்கள் மற்றும் வெள்ளைநிறப் பின்னணியில் எடுக்கப்பட்ட புகைப்படத்துடன் செப். 30 ஆம் தேதிக்குள்அனுப்பி வைக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தை 044-22505886 மற்றும் 22500417 ஆகிய எண்களில் தொடா்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.