மதுரை மீனாட்சியம்மன் இன்று யானை எய்த திருவிளையாடல் கோலத்தில் காட்சி தருகிறாள்.காஞ்சிபுரத்தை ஆட்சி செய்த சோழ மன்னன் ஒருவன் பாண்டியநாட்டுடன் போரிட விரும்பினான். அதற்காக சமணர்கள் மூலம் அபிசார வேள்வி ஒன்றை நடத்த, அதிலிருந்து மாய யானை வெளிப்பட்டது. அது பாண்டிய நாட்டை நோக்கி வர தயாராக இருந்தது. அப்போது மதுரை மன்ன ராக இருந்த விக்ரமபாண்டியன் இதை கேள்விப்பட்டு, ''சொக்கநாதா! கொடிய யானையிடம் இருந்து நாட்டைக் காத்தருள்க!'' என வேண்டினான். ''பயம் வேண்டாம்! கீழ்த்திசையில் அட்டாலை மண்டபம் கட்டு'' என அசரீரி ஒலித்தது.
பாண்டியனும் அவ்வாறே செய்ய, சிவன் வில்லேந்தும் வீரனாகத் தோன்றி நரசிங்க கணை தொடுத்து யானையை வதம் செய்தார். இக்கோலத்தை தரிசித்தால் எதிரி தொல்லை, வீண்பயம் நீங்கும். நைவேத்யம் : தயிர்வடை, எள்சாதம், புளியோதரை பாட வேண்டிய பாடல்கருத்தன எந்தை தன் கண்ணன வண்ணக்கனகவெற்பிற்பெருத்தன பால் அழும் பிள்ளைக்கு நல்கின பேரருள்கூர்திருத்தன பாரமும் ஆரமும் செங்கைச் சிலையும் அம்பும்முருத்தன மூரலும் நீயும் அம்மே என் வந்தென் முன்நிற்கவே.