இந்திய பல்கலைக் கழகங்கள் மற்றும் கல்லூரிகளில், உதவிப் பேராசிரியர் (Assistant Professor) மற்றும் இளம் ஆராய்ச்சியாளர் (Junior Research Fellowship) போன்ற பணிகளில் சேர்வதற்கான பல்கலைக்கழக மானியக் குழுவின் தேசிய தகுதித் தேர்வான யுஜிசி நெட் (UGC NET) டிசம்பர் 2019-க்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணிகள்:
1. உதவிப் பேராசிரியர்கள்(Assistant Professor)
2. இளம் ஆராய்ச்சியாளர்கள்(JRF)
முக்கிய தேதிகள்:
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி: 09.10.2019, இரவு 11.50 மணி வரை
ஆன்லைனில் தேர்வுக்கட்டணம் செலுத்த கடைசி தேதி: 10.10.2019, இரவு 11.50 மணி வரை
தேர்வு நடைபெறும் தேதிகள்: 02.12.2019 முதல் 06.12.2019 வரை
வயது வரம்பு: (01.12.2019 அன்றுக்குள்)
1. இளம் ஆராய்ச்சியாளர் (JRF) என்ற பணிக்கு, அதிகபட்சமாக 30 வயதுக்குள் இருத்தல் வேண்டும்.
2. உதவிப் பேராசிரியர் (AP) என்ற பணிக்கு, அதிகபட்ச வயது வரம்பு கிடையாது.
தேர்வுக்கட்டணம்:
1. பொதுப் பிரிவினர் / Un Reserved - ரூ.1,000
2. EWS / OBC - NCL - ரூ.500
3. SC / ST / PwD / Transgender - ரூ.250
கல்வித்தகுதி:
குறைந்தபட்சமாக, அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் முதுகலை பட்டப்படிப்பில் 55% தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்.
குறிப்பு:
கல்லூரியில் கடைசி வருடம் பயின்று கொண்டிருப்பவர்களும் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்கும் முறை:
ஆன்லைனில்,https://ugcnet.nta.nic.in அல்லது https://ugcnet.nta.nic.in/webinfo/public/home.aspx போன்ற இணையதள முகவரியில் சென்று விண்ணப்பிக்கலாம்.
மேலும், இது குறித்த முழுத் தகவல்களை பெற, https://ugcnet.nta.nic.in/WebInfo/Handler/FileHandler.ashx?i=File&ii=18&iii=Y - என்ற இணையதள முகவரியில் சென்று தெரிந்து கொள்ளலாம்.