Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Sunday, September 29, 2019

தமிழ் தெரிந்தால் தான் இனி தேர்ச்சி பெற முடியும்: டிஎன்பிஎஸ்சி செயலர் பேட்டி



தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் நடத்தப்படும் குரூப் 2 மற்றும் குரூப் 2 ஏ ஆகிய 2 பிரிவு பணியிடங்களுக்கும் இனி ஒரே மாதிரியான தேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.



தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் 2 தேர்வில் பொது தமிழ் நீக்கப்பட்டுள்ளதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் தி.வேல்முருகன் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், டிஎன்பிஎஸ்சி செயலர் நந்தகுமார், செய்தியாளர்களை ஞாயிற்றுக்கிழமை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில்,



முதன்மைத்தேர்வில் மொழிப்பாடம் எழுத்துத்தேர்வாக மாற்றப்பட்டுள்ளது. இதனால்தான் முதல் நிலைத்தேர்வில் மொழிப்பாடம் நீக்கப்பட்டுள்ளது. குரூப்-2 முதன்மை பாடம் எளிமைப்படுத்தப்பட்டுள்ளது, இதனால் குரூப் 2 தேர்வில் இனி கிராமப்புற மற்றும் தமிழ் வழியில் படித்த மாணவர்களும் தேர்ச்சி பெறுவார்கள்.

குரூப்-2 பழைய பாடத்திட்டத்தின்படி தமிழே தெரியாத ஒருவர் தேர்வில் வெற்றி பெற்று அரசு பணிக்கு செல்லமுடியும். ஆனால், புதிய பாடத்திட்டத்தின் மூலம் தமிழ் தெரியாதவர்கள் தேர்ச்சி பெறுவது முற்றிலும் தடுக்கப்பட்டுள்ளது.



டிஎன்பிஎஸ்சி தேர்வில் ஆள்மாறாட்டம் இதுவரை நடந்தது இல்லை, இனி வரும் நாட்களிலும் நடக்க வாய்ப்பில்லை என்று தெரிவித்தார்.

Popular Feed

Recent Story

Featured News