பள்ளித் தரங்கள் மற்றும் மதிப்பீட்டு கட்டமைப்பு என்பது பள்ளியை மதிப்பீடு செய்வதற்கான ஒரு விரிவான செயற்கருவி ஆகும்.ஒவ்வொரு பள்ளியின் முக்கிய செயல்திறன் பகுதிகளைக் கண்டறிந்து அதனை மேம்படுத்தவும், புதிய உத்திகளைக் கையாண்டு அப்பள்ளியிலுள்ள குறைகளை நிவர்த்தி செய்யவும் இம்மதிப்பீடானது உதவுகிறது.
நமது மாநிலத்தில் இம்மதிப்பீட்டு கட்டமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள சுயமதிப்பீடானது கடந்த 2016 - 2017 மற்றும் 2018-2019 ஆம் ஆண்டிலும் நடத்தப்பட்டுள்ளது.இதன் தொடர்ச்சியாக சென்ற கல்வியாண்டு போல இக்கல்வியாண்டிலும் தேசிய திட்டமிடல் மற்றும் நிருவாக நிறுவனத்தால் வழங்கப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளின் அடிப்படையில் புறமதிப்பீடு மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.