Join THAMIZHKADAL WhatsApp Groups
இந்திய நாட்டின் தேசப் பிதா மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த நாள் நாடு முழுவதும் அக்டோபர் 2 அன்று கோலாகலமாகக் கொண்டாடப்பட உள்ளது.
காந்தி அவர்களின் பொன்மொழிகள் இன்றைய காலகட்டத்திலும் நம் வாழ்க்கைக்கு வழிகாட்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. அவ்வாறாக அவர் வழங்கிய பொன்மொழிகள், காந்தியைப் பற்றி நாம் அறியாத சில தகவல்களை இங்கே காணலாம் வாங்க.Gandhi Jayanti 2019
காந்தி ஏன் மகாத்மா ஆனார்?
இந்திய நாட்டின் சுதந்திரம் என்பது அவ்வளவு எளிதில் கிடைத்தது அல்ல. அதில் மகாத்மாவின் பங்கு போற்றத்தக்கது. ஆனால் மகாத்மா காந்தியை வெறுமனே ஒரு சுதந்திரப் போராட்ட தியாகியாக மட்டுமே பார்க்க முடியாது. இந்த ஒட்டுமொத்த இந்தியாவையுமே உருவாக்கியவர், முன் நின்று வழிநடத்தியவர் அவர் தான்.
Gandhi Jayanti 2019
தேசப் பிதா
காந்தியின் இச்செயல்களாலேயே அவர் இந்திய நாட்டின் தேசப் பிதா என இன்றும் அன்போடு போற்றப்படுகிறார். ஆங்கிலேயக் காலனித்துவத்தை எதிர்த்து போரிட்டது மட்டுமல்லாது, லட்சக்கணக்கான மக்களுக்கு அகிம்சை முறையைக் கற்றுக் கொடுத்தார். அவ்வாறான மகாத்மா காந்தியிடம் நாம் கற்றுக்கொள்ள வேண்டிய செயல்களும் பல உள்ளது.
Gandhi Jayanti 2019
மனிதநேயம்
மகாத்மா காந்தி எழுதிய பொன்மொழிகளில் குறிப்பிடத்தக்கது மனித நேயம். அதில், மனித நேயம் என்பது ஒரு கடலை போன்றது என்பதால் அதன் மீது விழும் சிறிய கரும்புள்ளி அதனை அழித்து விடாது என அவர் கூறுவார். நம் வாழ்வின் ஏதேனும் ஓர் சூழ்நிலையில் துன்பத்தைச் சந்திக்க நேரிட்டாலும், மனித நேயத்தின் மீது நம்பிக்கையை இழக்கக் கூடாது.
Gandhi Jayanti 2019
தொடர் முயற்சியே வெற்றியின் வழி
விடா முயற்சி விஸ்வரூப வெற்றி என்பது தான் காந்தியின் கூற்றும். தனக்கான இலக்கை நிர்ணயித்து அதனை நோக்கி நகரும் மனிதன், அதில் எவ்வளவு சோதனைகளைச் சந்தித்தாலும் ஒரு போதும் பின் வாங்கக் கூடாது. இதற்கு உதாரணமாக காந்தியையே எடுத்துக் கொள்ளலாம். தொடர்ச்சியான சிறைவாசம் அவருக்குத் தடங்களாக இருந்தாலும் அதனைக் கண்டு ஒருபோதும் அவர் சோர்வடையவில்லை. சுதந்திரம் என்ற இலக்கை நோக்கி நகர்ந்துகொண்டே இருந்தார், வெற்றியும் கண்டார்.
Gandhi Jayanti 2019
ஓடாதீர்கள்
நம் ஒவ்வொருவரின் வாழ்விலும் கடைபிடிக்க வேண்டிய பல்வேறு போதனைகளை அவர் முன்வைத்துள்ளார். அதில், ஒன்று தான் எளிமை. இன்று உலகம் முழுவதும் அறிந்த ஒரு மனிதர் தன் வாழ்க்கையை ஒரு எளிய ஆடை மற்றும் கம்பைக் கொண்டு மட்டுமே வாழ்ந்தார். அதனால், பொருட்களின் மீதான நம் ஆசைகளைக் கட்டுப்படுத்தி, எளிமையான வாழ்க்கையை வாழ, அவரது வாழ்க்கை நமக்கு பாடம்.
Gandhi Jayanti 2019
எண்ணமே வாழ்க்கை
காந்தியிடம் நீங்கள் கற்க வேண்டிய விஷயங்களில் முக்கியமான ஒன்று எண்ணமே வாழ்க்கை. மனிதன் எதனை சிந்திக்கிறானோ அதை தான் எப்போதும் செய்கிறான். ஒருவனுடைய ஆளுமையைத் தீர்மானிப்பது அவனது சிந்தனை என்கிறார் அவர். அவ்வாறு நேர்மறையாகச் சிந்திப்பவர்கள் தங்களின் இலக்குகளைச் சுலபமாக அடைவார்கள். இதுவே எதிர்மறையாகச் சிந்திப்பவன் என்றால் தன் தோல்வியை எண்ணிச் சோர்ந்து விடுவான்.
மகாத்மா காந்தியைப் பற்றி அறிய வேண்டியவை
மேன் ஆப் தி இயர்
1930 ஆம் ஆண்டு அமெரிக்காவின் டைம்ஸ் பத்திரிக்கையில், காந்தியை "மேன் ஆப் தி இயர்" என்று குறிப்பிட்டு பிரசுரம் செய்யப்பட்டது.
Gandhi Jayanti 2019
காந்திக்குப் பிடித்த எழுத்தாளர்
புத்தகம் படிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்த காந்திக்கு, மிகவும் பிடித்த எழுத்தாளராக இருந்தது லியோ டால்ஸ்டாய். ரஷ்ய எழுத்தாளர் லியோ டால்ஸ்டாய் என்பவரோடு, காந்தி அதிக நட்புறவு கொண்டிருந்தார்.
Gandhi Jayanti 2019
காந்தியின் ஊதியம்
மகாத்மா காந்தி, சவுத் ஆப்ரிக்காவில் பணியாற்றிக் கொண்டிருந்த போது அவருடைய ஊதியம் வருடத்திற்கு $15000.
Gandhi Jayanti 2019
சுயசரிதை
காந்தியைப் பற்றும் பேசும் போது மறவாமல் குறிப்பிட வேண்டியது காந்தியின் சுயசரிதை. காந்தியின் தாய் மொழி குஜராத்தி. மொழியின் மீது அதீத பற்று கொண்டிருந்த அவர் தனது சுயசரிதையைக் குஜராத்தியில் தான் முதன் முதலில் எழுதினார். பின் அவரது உதவியாளர்கள் மூலம் அவரது சுயசரிதை ஆங்கிலத்திற்கு மொழி மாற்றம் செய்யப்பட்டது.
Gandhi Jayanti 2019
உலக அகிம்சை தினம்
மகாத்மா காந்தியின் பிறந்த நாளான அக்டோபர் 2 ஆம் தேதியே உலக அகிம்சை தினமாகும். இதனை உலக ஐக்கிய நாடுகள் அமை அறிவித்துள்ளது.
Gandhi Jayanti 2019
கல்வி குறித்து காந்தியின் சிந்தனை
1835-ஆம் ஆண்டு ஆங்கில அரசு புகுத்திய கல்வி முறைதான் 2015-ம் ஆண்டிலும் சில மாற்றங்களுடன் தொடர்ந்து பின் பற்றப்பட்டது. ஆங்கில அரசின் மெக்காலே கல்வித் திட்டத்தின் சீர்கேடுகளைக் காந்தி நன்றாக உணர்ந்திருந்தார். அந்தக் கல்வித் திட்டம், பணம் படைத்தோருக்கு பணி செய்ய மட்டுமே என அவர் அறிந்திருந்தார்.
Gandhi Jayanti 2019
அடையாளங்களை மறைக்கும் கல்வி
ஆங்கிலேயர்களால் புகுத்தப்பட்ட கல்விக் கொள்ளை நமது கலாச்சார பண்பாடுகளை, நம் முன்னோர்களின் அடையாளங்களை வேருடன் மறைத்து விடும் என்று காந்தி எதிர்த்தார். ஆங்கிலக் கல்வி முறை நேரடியான சமுதாய சூழ்நிலைகளிலிருந்தும் உடல் உழைப்பிலிருந்தும் நமது குழந்தைகளைப் பிரித்துவிடும் என அறிந்த அவர் 'உண்மையான கல்வி என்பது தனிமனிதனின் மனதில் பண்பு, பொறுமை, ஞானம், உண்மை ஆகியவற்றை விதைப்பதில் அடங்கியிருக்கிறதே தவிர இலக்கிய பயிற்சியில் இல்லை' என்று கூறியவர் காந்தி.
Gandhi Jayanti 2019
மனிதம் என்கிற புத்தகம்
உண்மையான கல்வி என்பது உங்களிடமிருந்து சிறந்த எண்ணத்தை, உங்கள் ஆற்றலை வெளியேக் கொண்டுவருவதில் தான் உள்ளது. மனிதம் என்னும் புத்தகத்தை விடச் சிறந்த புத்தகம் வேறென்ன இருக்கமுடியும்? (ஹரிஜன்' 30.3.34) என்பதுதான் காந்தியின் அடிப்படை வாதம். கல்வியின் அடித்தளம் அனுபவம், கற்பதற்கான வழி சுதந்திரம் என்கின்ற டால்ஸ்டாயின் கருத்தோட்டத்தில் தான் காந்தியக் கல்வியும் இணைந்து பயணிக்கிறது.