Join THAMIZHKADAL WhatsApp Groups
இரயில் இந்தியா தொழில்நுட்ப மற்றும் பொருளாதார சேவையில் (RITES) காலியாக உள்ள Site Inspector மற்றும் Junior Assistant பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
காலிப் பணியிடங்கள் :
Site Inspector பிரிவில் 32 பணியிடங்களும், Junior Assistant பிரிவில் 24 பணியிடங்களும் உள்ள.
கல்வித் தகுதி:
Site Inspector பணியிடங்களுக்கு டிப்ளமோ படித்திருக்க வேண்டும். Junior Assistant பணியிடங்களுக்கு பி.காம் மற்றும் பிபிஏ படித்து முடித்திருக்க வேண்டும்.
சம்பளம்:
Site Inspector பணியிடங்களுக்கு ரூ.24,000 முதல் ரூ.90,000 வரை வழங்கப்படும். Junior Assistant பணியிடங்களுக்கு ரூ.18,000 முதல் ரூ.66,000 வரை வழங்கப்படும்.
வயது வரம்பு:
30 முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்:
பொது மற்றும் ஓ.பி.சி. விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ.300 மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்ப கட்டணம் ரூ.100 ஆகும்.
தேர்வு செய்யப்படும் முறை:
எழுத்துத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
ஆன்லைனில் https://rites.com/ என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் முழுமையான விவரங்களை அறிய https://rites.com/web/images/stories/uploadVacancy/49%20-%2050_19%20finance%20regular%20ad%20JA,%20JM.PDF?fbclid=IwAR2N1D8zqkpQ76_W4AZuaWlEOc7CULMwVEE-mkyMQBhvDZ0lnf3a5Fv7GeY என்ற இணையதளத்தில் சென்று அறிந்து கொள்ளலாம்.
விண்ணப்பிக்க கடைசி தேதி : 10-10-2019