Join THAMIZHKADAL WhatsApp Groups
மத்திய அரசின் உயர் கல்வி உதவித்தொகை குறித்த விவரங்களை கல்லூரி கல்வி இயக்குநர் அலுவலகம் வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து கல்லூரி கல்வி இயக்குநர்ஜோதி வெங்கடேஷ்வரன் வெளியிட்ட செய்தி: மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தால் வழங்கப்படும் திறன் அடிப்படையிலான கல்வி உதவித் தொகை திட்ட அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது.
2019 மார்ச் பிளஸ்-2 பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்று உயர் கல்வியில் சேர்ந்த மாணவர்களிடமிருந்து புதிய விண்ணப்பங்களும், ஏற்கெனவே 2015, 2016,2017,2018 ஆம் ஆண்டுகளில் தெரிவு செய்யப்பட்டு உதவித் தொகை பெற்று வருபவர்களிடமிருந்து புதுப்பித்தலுக்கான விண்ணப்பங்களும் வர வேற்கப்பட்டுள்ளன. இதற்கு www.scholarships.gov.in என்ற மத்திய அரசின் வலைதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க அக்டோபர் 31 கடைசி நாளாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.