Join THAMIZHKADAL WhatsApp Groups
புதுடெல்லி:
எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., படிப்புகளுக்கு 'நீட்' என்னும் தேசிய தகுதி மற்றும் நுழைவுத்தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. இந்த ஆண்டு தமிழ்நாட்டில் குறைந்தது 4 பேர் ஆள் மாறாட்ட மோசடியில் ஈடுபட்டு, மருத்துவ கல்லூரிகளில் சேர்ந்து இருப்பது அம்பலமாகி மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதே நேரத்தில் அடுத்த ஆண்டு நடக்க உள்ள 'நீட்' தேர்வில் இப்படி ஆள் மாறாட்ட மோசடிகள் நடைபெறாமல் தடுப்பதற்கு தேர்வினை நடத்துகிற தேசிய தேர்வு முகமை (என்.டி.ஏ.) அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறது.