Join THAMIZHKADAL WhatsApp Groups
எலுமிச்சை ஜூஸில் கிட்டத்தட்ட 5% சிட்ரிக் அமிலம் இருக்கிறது. இந்த சிட்ரஸ் பழம் நோய்தொற்றுகளை சரி செய்கிறது. வெந்நீரில் எலுமிச்சை சாறை கலந்து பருகினால், அது செரிமான கோளாறுகளை சரிசெய்யும். சாதாரண சளியை சீர்செய்யவும் உதவும். ஒரு ஸ்பூன் லெமன் ஜூஸை தேனு டன் கலந்து சாப்பிட்டால், சளி தொல்லையிலிருந்து நிவாரணம் கிடைக்கும்.
சுடுநீர் அல்லது தேநீரில் எலுமிச்சையைச் சேர்த்து குடித்தால் உடல் வலி குறையும். எலுமிச்சையில் குணமளிக்கும் பண்புகளும் நிறைய உண்டு. உமிழ்நீரை அதிகமாக சுரக்க வைப்பதால் வறண்ட வாய் பிரச்சினை சரியாகும். எலுமிச்சை துண்டை நுகர்வதன் மூலம் தலைசுற்றலை எளிதாக தவிர்க்கலாம். இது மயக்கத்தையும் போக்கும்.