Thamizhkadal WhatsApp Channel

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Sunday, October 13, 2019

அங்கன்வாடி பணியாளர்களுக்கான ஆரம்பகால குழந்தை பருவ பராமரிப்பு மற்றும் கல்வி பாடத் திட்ட பயிற்சி முகாம்

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups
திருச்சி மணிகண்டம் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப் பணிகள் திட்டத்தின் அங்கன்வாடி பணியாளர்களுக்கான ஆரம்பகால குழந்தை பருவ பராமரிப்பு மற்றும் கல்வி பாடத் திட்ட பயிற்சி முகாம் மணிகண்ட ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது. ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலர் கெளசல்யா தலைமை வகித்தார். மேற்பார்வையாளர் லட்சுமி முன்னிலை வகித்தார்.
முகாமில் கர்ப்பத்தில் குழந்தைகளின் வளர்ச்சி நிலை குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. அதில் பெண்களுக்கான கர்ப்பகாலம், ஊட்டச்சத்து உணவு முக்கியத்துவம், ஊட்டச்சத்துக்கள், அங்கன்வாடி பணிகள், போஷன் அபியான் திட்டத்தின் பணிகள், சுகாதார பணிகள், கர்ப்ப காலத்தில் குழந்தைகளின் வளர்ச்சி நிலை குறித்து அறிந்து கொள்ளுதல், பிறப்பு முதல் இரண்டு வயது வரை வளர்ச்சிப்பணிகள் குறித்து எடுத்துக் கூறப்பட்டது குழந்தைகளுக்கு தேவையான ஊட்டச்சத்து தடுப்பூசி அட்டவணை எடை எடுத்தலின் முக்கியத்துவம் உயரத்தை கணக்கிடுதல் குறித்து முதல் நாள் பயிற்சியில் பயிற்றுநர்க மூலம் எடுத்துக் கூறப்பட்டது. முன்பருவக் கல்விக்கான செயல்பாடுகள் ,கதை சொல்லுதல் படம் பார்த்துப் பேசுதல் குழந்தையின் அசைவுகள் தனித்தன்மையை அறிதல், அங்கன்வாடி மையத்தில் எப்படி செயல்படுவது என கூறப்பட்டது .



மேலும்

பயிற்சிப் பட்டறையில் ஆரோக்கியமான குழந்தைக்கு முதல் 1000 நாட்கள் முக்கியத்துவம் வாய்ந்தது எனக் கூறப்பட்டது .ஒரு குழந்தையின் ஆரோக்கியமான வளர்ச்சி என்பது உடல் வளர்ச்சி மற்றும் மூளை வளர்ச்சியும் சேர்ந்தது . கருவாக உருவான நாளிலிருந்து ஆரம்பமாகி இரண்டு வருடங்கள் ஆன குழந்தை ஆயிரம் நாட்களில் அதிகஅளவில் வளர்ச்சி நடைபெறுகிறது. ஒன்பது மாத கர்ப்ப காலம், 6 மாதம் வரை தாய்ப்பால் குடிக்கும் காலம் ,6 மாதம் முதல் 2 வருடம் வரை உள்ள நாட்கள் ஆகியவை சேர்ந்ததுதான் இந்த முதல் 1000 நாட்கள் ஆகும் .

வாழ்நாள் முழுமையான ஆரோக்கியம் மற்றும் அறிவு உருவாவதற்கு அதிக வாய்ப்புள்ள காலகட்டம் என்பதால் இந்த ஆயிரம் நாட்களுக்கு தாய் மற்றும் குழந்தையின் ஆரோக்கியத்திற்கு ஊட்டச்சத்து முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. கர்ப்பிணிப் பெண்கள் கர்ப்ப காலத்தில் ஊட்டச்சத்து நிறைந்த ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்ளவேண்டும். குழந்தைக்கு ஆறு மாதங்கள் தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும் .ஆறு மாதத்திற்கு பிறகு தாய்ப்பாலுடன் ஊட்டச்சத்து மிக்க உணவுகளை கொடுக்க வலியுறுத்தப்பட்டது.



தன்சுத்தம் உணவு தயாரிக்கும் குழந்தைகளுக்கு உணவு ஊட்டும் போது கைகளை சுத்தமாக கழுவ வேண்டும். வீட்டில் வளர்க்கப்படும் விலங்குகளின் கழிவுகளை முறையாக இயற்கை சோப்பு பயன்படுத்தி கழுவ வேண்டும் .ஒவ்வொரு வீட்டிலும் மலம் கழிக்க கழிவறையை பயன்படுத்த வேண்டும். மாதவிடாய் காலங்களில் நோய்த் தொற்று ஏற்படாமல் தடுக்க பெண்களும் இளம் பெண்களும் தன் சுற்றத்தை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என பயிற்சி அளித்தார்கள். பிறந்துஇரண்டு மாதங்களில் தலை உயர்த்தும் பருவமாகும். ஐந்து முதல் எட்டு மாதங்களில் உட்கார்ந்து, தவளும் பருவமாகும் .8 முதல் 13 மாதங்களில் எழுந்து நிற்கும் பருவமாகும். இரண்டரை வயது முதல் 3 வயது வரை பரிசோதிக்கும் பருவமாகும்.



இப்பயிற்சிப் பட்டறையில் திருச்சி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ரவிச்சந்திரன், அன்னை தெரசா அறக்கட்டளை இயக்குனர் பிரபு, நடமாடும் மருத்துவம் மருத்துவர் அனுசியா விக்னேஸ்வரி, இயற்கை நலவாழ்வியல் ஆலோசகர் யோகா ஆசிரியர் விஜயகுமார் உட்பட ஊட்டச்சத்து நிபுணர்கள் பயிற்சி அளித்தார்கள்.

Popular Feed

Recent Story

Featured News