Thamizhkadal WhatsApp Channel

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Monday, October 7, 2019

ஆசிரியர்களுக்கான இடமாறுதல் கலந்தாய்வு: இந்த மாத இறுதியில் தொடங்க திட்டம்

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups
அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்க ளுக்கு இந்த மாத இறுதி வாரத்தில் இடமாறுதல் கலந்தாய்வை நடத்த பள்ளி கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்க ளுக்கு ஆண்டுதோறும் மே மாதம் இடமாறுதல் கலந்தாய்வு நடத் தப்படும். காலியாக உள்ள இடங்களில், ஆசிரியர்களின் விருப்பத் துக்கு ஏற்ப, இடமாறுதல் வழங்கப்படும். இந்த ஆண்டு கலந்தாய்வு அறிவிப்பின் போது, தமிழக பள்ளி கல்வித்துறை, புதிய விதிகளை அறிவித்தது.


அதன்படி, அரசு ஊழியர்களை போல, ஆசிரியர்களும் குறைந்தபட்சம், மூன்று ஆண்டுகள் ஒரே இடத்தில் பணியாற்றி இருக்க வேண்டும். இதை எதிர்த்து, ஆசிரியர்கள் பலர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய் தனர். இந்த வழக்கு விசாரணைகளால், ஆசிரியர்களுக்கான இட மாறுதல் கலந்தாய்வு நான்கு மாதங்களுக்கு மேலாக நிறுத்தி வைக் கப்பட்டிருந்தது. இந்த நிலையில் கலந்தாய்வு நடத்துவதற்கு சென்னை உயர் நீதிமன்றத்தில், சட்டப்பூர்வ அனுமதியை பள்ளி கல்வித்துறை கேட்டுள்ளது. இந்த உத்தரவு கிடைத்ததும் இந்த மாத இறுதி வாரத்தில் கலந்தாய்வு நடவடிக்கைகளை பள்ளி கல்வித்துறை தொடங்கவுள்ளது.


இதில் மூன்று ஆண்டுகள் ஒரே இடத்தில் பணியாற்றி இருக்க வேண்டும் என்ற விதியில் மாற்றம் செய்யப்ப டும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக, நீதிமன்ற உத்தரவை கருத்தில் கொண்டு ஆசிரியர் களுக்கான கலந்தாய்வை உடனடியாக நடத்த வேண்டும் என பல் வேறுஆசிரியர் சங்கங்கள், கல்வியாளர்கள் வலியுறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Popular Feed

Recent Story

Featured News