Thamizhkadal WhatsApp Channel

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Saturday, October 26, 2019

இதனால கூட முதுகு வலி வருமா ?

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups

நம்மில் பலருக்கும் இருக்கும் பிரச்சனை முதுகு வலி. அலுவலகத்தில் அமர்ந்து பணிபுரிபவர்கள், மார்க்கெட்டிங் வேலையில் இருப்பவர்கள், 50 வயதுக்கு மேற்பட்டவர்கள், உடல் பருமனானவர்கள், 45 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் உள்ளிட்ட அனைவரையும் தாக்குகிறது இந்தப் பிரச்சனை. முதுகு வலி ஏற்பட காரணம் என்ன? முதுகு வலியை எப்படி குணப்படுத்துவது இதுபோன்ற பல கேள்விகள் நம்முள் இருக்கின்றன. இதற்கானத் தீர்வுகளை இங்கு காண்போம்.
முதுகு வலி ஏற்படக் காரணங்கள் :
அதிக அளவு எடையுள்ள பொருள்களை தூக்கும் போது முதுகுத் தண்டு மற்றும் தசைகளில் அழுத்தம் ஏற்படுகிறது. ஒரு சிலர் வேலைசெய்யும் பொழுது தவறான முறையில், ஒரே கைகளில் எடையைத் தூக்கி கொண்டு செல்வார்கள். இதனால் முதுகு வலி ஏற்படலாம்.



பெண்கள் ஹீல்ஸ் கொண்ட காலணிகள் அணிவதால், இடுப்புத் தசை அழுத்தப்பட்டு அடிமுதுகில் வலி ஏற்படுகிறது.

செரிமானக் கோளாறு, குடல் சார்ந்த பிரச்சனைகள் உள்ளவர்கள் நீண்டநேரம் ஒரே இடத்தில் அமர்ந்து வேலைபார்த்தால் முதுகு வலி ஏற்பட வாய்ப்பு உள்ளது.

பல மணி நேரம் தொடர்ந்து இரு சக்கர வாகனம் ஓட்டுவதால், முதுகுத் தண்டுவடத்தின் நெகிழ்வுத்தன்மை குறைந்து இறுக்கமாகிறது. இதனாலும் முதுகு வலி ஏற்படலாம்.

எந்தவித சத்துக்களும் இல்லாத நொறுக்குத் தீனிகளை அதிகமாக உட்கொள்வதால், உடலில் ஊட்டச்சத்துப் பற்றாக்குறை ஏற்படுகிறது. இதன் விளைவாக அடிமுதுகு உட்பட உடலில் பல பாகங்களில் வீக்கம், வலி ஏற்படுகிறது.

அலுவலக வேலைச்சுமை, வீட்டுப் பிரச்சனைகளால் ஏற்படும் மனஅழுத்தத்தின் விளைவாகவும் முதுகு வலி ஏற்படலாம்.



முதுகு வலியை விரட்டும் வழிகள்:

பெரும்பாலும் அலுவலகங்களில் அமர்ந்து கொண்டே தான் வேலை செய்ய வேண்டிய நிலை இருக்கும். எனவே அவர்கள் வேலை செய்யும் போது ஒழுங்காக, நேரான முறையில் வசதியாக அமர்தல் அவசியம். அதுமட்டுமின்றி நீண்ட நேரம் அமர்ந்து கொண்டே இருக்காமல், கொஞ்சம் எழுந்து நிற்பது, நடந்து செல்வது என உடலுக்கு அவ்வப்போது வேலை கொடுப்பது நல்லது.

வாரத்தில் ஒரு நாள் நல்ல மசாஜ் எடுத்து கொள்வதை வழக்கமாக கொள்ளுங்கள். வாரம் முழுவதிலுமான உடல் வேலைகளில் நம் தசைகளை உற்சாகப்படுத்த இது உதவும்.

ஆண்களுக்கு ஏற்படும் இடுப்பு வலி மற்றும் முதுகு வலிக்கு நீச்சல் உடற்பயிற்சி செய்தால் எந்த தைலமும், மருந்தும் தேவையில்லை.

பெண்கள் அதிக உயரமுள்ள குதிகால் உடைய செருப்புகளை அணிவதைத் தவிர்க்க வேண்டும்.

Popular Feed

Recent Story

Featured News