Join THAMIZHKADAL WhatsApp Groups
இந்திய ரயில்வேயின் தென்கிழக்கு மத்தியன் ரயில்வேயில் காலியாக உள்ள குரூப் பி மற்றும் குரூப் டி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
காலிப் பணியிடங்கள்:
Group 'C' Level 2 பிரிவில் 02 பணியிடங்களும், Erstwhile Group 'D' Level-1 பிரிவில் 06 பணியிடங்களும் உள்ளன.
கல்வித் தகுதி:
பிளஸ்டூ படித்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் டிப்ளமோ, ஐடிஐ முடித்து சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். தேசிய அளவிலான சாரணர் பயிற்சி நிகழ்ச்சிகளில் குறைந்தது 2 நிகழ்ச்சிகளில் பங்கு பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு:
18 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை:
நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
ஆன்லைனில் www.secr.indianrailways.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்த பின் விண்ணப்பித்ததை பிரிண்ட் அவுட் வைத்துக்கொள்ளவும். மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://images.dinamani.com/uploads/user/resources/pdf/2019/10/1/SECR-Recruitment-2019-08-Group-C-D-Posts.pdf என்ற இணையதளத்தில் சென்று அறிந்து கொள்ளலாம்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 13.10.2019