Join THAMIZHKADAL WhatsApp Groups
சாரணர் இயக்கத்தின் தேசிய ஆலோசகராக, தமிழக பள்ளி கல்வி முன்னாள் இயக்குநர் இளங்கோவன் நியமிக்கப் பட்டுள்ளார்.
பாரத சாரண, சாரணியர் இயக்கமான, 'ஸ்கவுட்ஸ் அண்ட் கெய்ட்ஸ்' இயக்கத்தின், புதிய நிர்வாகிகள் அறிவிக்கப் பட்டுள்ளனர்.
தேசிய அளவில், சாரணர் பிரிவு தலைமை கமிஷனராக, சிக்கிம் மாநிலத்தை சேர்ந்த சேத்ரி, சாரணியர்பிரிவு தலைமை கமிஷனராக, மத்திய சுற்றுலா துறை அதிகாரி ரூபிந்தரும் நியமிக்கப் பட்டுள்ளனர். தேசிய அளவில், தலைமையக பொறுப்புகளில், 29 பேர்; தேசிய ஆலோசகர்களாக நான்கு பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.அதில், சாரணர் இயக்க வளர்ச்சிக்கான தேசிய ஆலோசகராக, தமிழக சாரணர் இயக்க கமிஷனர் இளங்கோவன் நியமிக்கப்பட்டுள்ளார். இவர், தமிழக பள்ளி கல்வி இயக்குனராக பணியாற்றி, ஓய்வு பெற்றவர்.