Thamizhkadal WhatsApp Channel

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Monday, October 14, 2019

முதுநிலை சித்த மருத்துவம்: ஆன்லைன் விண்ணப்பம் தொடக்கம்

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups
முதுநிலை சித்த மருத்துவப் படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு தொடங்கியுள்ளது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை வரும் 21-ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என்று இந்திய மருத்துவம், ஹோமியோபதி துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்ட அறிவிப்பு: அரும்பாக்கம் அறிஞர் அண்ணா அரசு பாரம்பரிய மருத்துவமனை வளாகத்தில் உள்ள சித்த மருத்துவக் கல்லூரியில் இளநிலை படிப்புகளுக்கு 60 இடங்கள் உள்ளன. இதைத் தவிர தனியார் கல்லூரிகளிலும் நூற்றுக்கும் மேற்பட்ட இடங்கள் உள்ளன.
முதுநிலை படிப்புகளிலும் தனியார் மற்றும் அரசு கல்லூரிகளில் 80 இடங்கள் உள்ளன. இந்நிலையில், முதுநிலை படிப்புக்கான விண்ணப்ப விநியோகம் கடந்த 12-ஆம் தேதி தொடங்கியது. www.tnhealth.org இணையதளம் வாயிலாக விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்யலாம். வரும் 21- ஆம் தேதி வரை விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்யலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அன்றைய தினம் மாலை 5.30 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று பாரம்பரிய மருத்துவத் துறை தெரிவித்துள்ளது.

Popular Feed

Recent Story

Featured News