Join THAMIZHKADAL WhatsApp Groups
திருச்சி அஞ்சல்தலை சேகரிப்பு மையத்தில் விற்பனை துவக்கம்
மகாத்மா காந்தியின் 150 வது ஆண்டு பிறந்த தினத்தை முன்னிட்டு எண்கோண வடிவ அஞ்சல் தலையை இந்திய அஞ்சல் துறையினர் வெளியிட்டுள்ளார்கள். ஒவ்வொரு அஞ்சல் தலையும் 25 ரூபாய் மதிப்புடையதயாகும். அஞ்சல் தலையில் மகாத்மா காந்தியின் மாணவப்பருவம், வழக்கறிஞர் , மகாத்மா காந்தி கஸ்தூரிபா புகைப்படம், ரயில் வண்டியில் இருந்து மகாத்மா காந்தி இறங்கும் படம் ,தீயதை பார்க்காதே, தீயதை பேசாதே, தீயதை கேட்காதே கருத்தை உணர்த்தும் மூன்று குரங்குகள் அஞ்சல்தலைகள் இடம்பெற்றுள்ளன. அஞ்சல் தலைகளின் பின்புறம் மகாத்மா காந்தி பிறந்த இடம், வழக்கறிஞர் அலுவலகம் , பிரச்சாரம் செய்யும் படம் , வெளிநாட்டு தலைவர்கள் படமும் இடம்பெற்றுள்ளது.
இத் தபால் தலையினை மகாத்மா காந்தி அஞ்சல் தலை சேகரிப்பாளர்கள் வாங்கி வருகிறார்கள். திருச்சிராப்பள்ளி தலைமை தபால் தலை அலுவலக அஞ்சல்தலை சேகரிப்பு நிலையத்தில் விற்பனை தொடங்கியுள்ளது .
ஐந்து தபால்தலை கொண்ட குறுவடிவ அஞ்சல் தலை தொகுப்பானது 150 ரூபாய் விலை ஆகும்.
திருச்சி அஞ்சல் தலை சேகரிப்பு நிலைய அலுவலர் ராஜேஷிடம் மகாத்மா காந்தி அஞ்சல் தலை சேகரிப்பாளர்கள் யோகா ஆசிரியர் விஜயகுமார் சதீஷ் தாமோதரன் கார்த்தி லால்குடி விஜயகுமார் உட்பட பலர் வாங்கி சென்றார்கள்