Thamizhkadal WhatsApp Channel

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Wednesday, October 2, 2019

UPSC: பொறியியல் பட்டதாரிகளுக்கு மத்திய அரசு வேலை: யுபிஎஸ்சி அறிவிப்பு!

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups

மத்திய அரசிற்கு உட்பட்ட ரயில்வே துறை, நில அளவை, பாதுகாப்பு, மத்திய நீர்வளத் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பொறியியல் பட்டதாரிகளுக்கான 495 பணியிடங்களை நிரப்பிடும் வகையில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கு மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம்

மொத்த காலியிடங்கள் : 495

பணியிட விபரங்கள்:-
சிவில் இன்ஜினியரிங்
இயந்திர பொறியியல்
மின் பொறியியல்
மின்னணுவியல் மற்றும் தொலைத்தொடர்பு பொறியியல்.



கல்வித் தகுதி : பொறியியல் துறையில் தொடர்புடைய பிரிவில் பொறியியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு : 01.01.2020 தேதியின்படி 21 முதல் 30 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை : www.upsconline.nic.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம் : பொது மற்றும் ஓபிசி விண்ணப்பதாரர்களுக்கு - ரூ.200

பெண் விண்ணப்பதாரர்கள், எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளி பிரிவைச் சேர்ந்த விண்ணப்பத்தாரர்கள் கட்டணம் செலுத்தத் தேவையில்லை.



தேர்வு முறை : முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : 15.10.2019

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://www.upsc.gov.in/sites/default/files/Notice-ESEP-2020-Engl_0.pdf?utm_source=DH-MoreFromPub&utm_medium=DH-app&utm_campaign=DH என்னும் இணைப்பில் சென்று பார்க்கவும்.

Popular Feed

Recent Story

Featured News