Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Friday, November 8, 2019

10-வது தேர்ச்சியா? கோவையிலேயே மத்திய அரசு வேலை!


கோயம்புத்தூரில் செயல்பட்டு வரும் வன மரபியல் மற்றும் மர இனப்பெருக்கம் நிறுவனத்தில் காலியாக உள்ள எம்டிஎஸ் மற்றும் கிளார்க் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கு 10, 12வது தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள். இதில், தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : வன மரபியல் மற்றும் மர இனப்பெருக்கம் நிறுவனம் (IFGTB)

பணியிடம் : கோயம்புத்தூர்

மொத்த காலியிடங்கள் : 15

பணி : Multi-Tasking Staff (MTS) -14



ஊதியம் : மாதம் ரூ.18,000

பணி : Lower Division Clerk (LDC) - 01

ஊதியம் : மாதம் ரூ.19,900

கல்வித் தகுதி : 10, 12-வது தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு : 18 முதல் 27 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கும் முறை : எழுத்து தேர்வின் மூலம் தகுதியானவர் தேர்ந்தெடுக்கப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை : http://ifgtb.icfre.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ் நகல்களை இணைத்து கீழ்வரும் முகவரிக்கு அஞ்சல் வழியாக அனுப்ப வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி :



The Director, Institute of Forest Genetics and Tree Breeding (IF GTB), Forest Campus, Cowly Brown Road, R.S. Puram, Coimbatore - 641002.

விண்ணப்பக் கட்டணம் :
எஸ்சி, எஸ்டி, பெண்கள் மற்றும் முன்னாள் ராணுவத்தினருக்கு - ரூ.100
மற்ற பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு - ரூ.300

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் http://ifgtb.icfre.gov.in/advertisements.php என்னும் அதிகாரப்பூர்வ இணையதள அறிவிப்பைக் காணவும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி : 25.11.2019 தேதிக்குள் கிடைக்கும் வகையில் அனுப்ப வேண்டும்.

Popular Feed

Recent Story

Featured News