Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Monday, November 11, 2019

வரலாற்றில் இன்று 11.11.2019

நவம்பர் 11 கிரிகோரியன் ஆண்டின் 315 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 316 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 50 நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்

1500 – பிரான்சின் பன்னிரண்டாம் லூயி மன்னனுக்கும் அராகனின் இரண்டாம் பேர்டினண்ட் மன்னனுக்கும் இடையில் நேபில்ஸ் பேரரசைத் தமக்கிடையே பிரிக்க உடன்பாடு எட்டப்பட்டது.
1673 – உக்ரேனின் கோட்டின் என்ற இடத்தில் போலந்து-லித்துவேனியாப் படைகள் ஓட்டோமான் இராணுவத்தைத் தோற்கடித்தன.
1675 – குரு கோவிந்த் சிங் சீக்கியர்களின் 10வது குருவானார்.
1675 – லெய்ப்னிட்ஸ் (Gottfried Leibniz) என்பவர் y=f(x) என்ற செயலி ஒன்றின் வரைபின் பரப்பைக் காணுவதற்கு முதன் முறையாக தொகையீட்டு நுண்கணிதத்தைப் பாவித்தார்.
1778 – மத்திய நியூ யோர்க்கில் செனெக்கா இந்தியர்கள் 40 பேரைக் கொன்றனர்.
1831 – அடிமைப் புரட்சியில் ஈடுபட்டமைக்காக கைது செய்யப்பட்ட நாட் டர்னர் வேர்ஜீனியாவில் தூக்கிலிடப்பட்டான்.
1865 – டீஸ்ட்டா ஆற்றின் கிழக்குப் பகுதிகளை பூட்டான் பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனிக்குக் கொடுத்தது.
1880 – ஆஸ்திரேலியாவின் Bushranger நெட் கெல்லி மெல்பேர்னில் தூக்கிலிடப்பட்டான்.
1887 – ஐக்கிய அமெரிக்காவின் சிக்காகோ நகரில் தொழிலாளர் தலைவர்கள் ஆகஸ்ட் ஸ்பைஸ், ஆல்பேர்ட் பார்சன்ஸ், அடொல்ஃப் ஃபிஷர், ஜோர்ஜ் ஏங்கல் ஆகியோர் தூக்கிலிடப்பட்டனர்.
1889 – வாஷிங்டன் ஐக்கிய அமெரிக்காவின் 42வது மாநிலமாகச் இணைக்கப்பட்டது.
1909 – ஹவாயில் பேர்ள் துறைமுகத்தில் அமெரிக்கக் கடற்படைத் தளம் அமைக்கப்பட்டது.
1918 – பிரான்சில் “கொம்பியேன் காடு” என்ற இடத்தில் தொடருந்துப் பெட்டி ஒன்றில் ஜேர்மனிக்கும் கூட்டுப் படைகளுக்கும் இடையில் போர்நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. முதலாம் உலகப் போர் 11:00 மணிக்கு முடிவுக்கு வந்தது.



1918 – ஜோசப் பித்சூத்ஸ்கி வார்சாவுக்குத் திரும்பி போலந்தின் உயர் இராணுவப் பதவியைப் பெற்றான். போலந்து விடுதலை பெற்றது.
1919 – இலங்கைத் தேசிய காங்கிரஸ் அமைக்கப்பட்டது.
1930 – அல்பேர்ட் ஐன்ஸ்டைன், லியோ சிலார்ட் ஆகியோர் தமது கண்டுபிடிப்பான ஐன்ஸ்டைன் குளிர்சாதனப்பெட்டிக்கான காப்புரிமத்தைப் பெற்றனர்.
1933 – யாழ் பொது நூல் நிலையம் அமைக்கப்பட்டது.
1940 – ஐக்கிய அமெரிக்காவின் மிட்வெஸ்ட் நகரில் எதிர்பாராத சூறாவளியினால் 144 பேர் இறந்தனர்.
1942 – இரண்டாம் உலகப் போர்: நாசி ஜேர்மனி பிரான்ஸ் மீதான தனது முற்றுகையை முடித்தது.
1960 – தெற்கு வியட்நாம் அதிபர் நியோ டின் டியெம் மீதான இராணுவப் புரட்சி தோல்வியில் முடிந்தது.
1965 – ரொடீசியாவில் இயன் ஸ்மித் தலைமையிலான வெள்ளை இன சிறுபான்மை அரசு விடுதலையை அறிவித்தது.
1966 – நாசா ஜெமினி 12 கப்பலை விண்ணுக்கு அனுப்பியது.
1968 – மாலைதீவுகளில் இரண்டாவது குடியரசு அறிவிக்கப்பட்டது.
1975 – ஆஸ்திரேலியப் பிரதமர் கஃப் விட்லம் தலைமையிலான அரசை அதன் ஆளுநர் கலைத்தார்.
1992 – இங்கிலாந்து திருச்சபை பெண்களையும் சமயகுருக்களாக சேர்ப்பதற்கு முடிவெடுத்தது.
2004 – யாசர் அரபாத் இறந்து விட்டதாக பாலஸ்தீன விடுதலை இயக்கம் அறிவித்தது. மஹ்மூத் அப்பாஸ் தலைவரானார்.



பிறப்புக்கள்

1898 – கி. ஆ. பெ. விசுவநாதம், தமிழறிஞர் (இ. 1994)
1821 – பியோதர் தஸ்தயெவ்ஸ்கி, ரஷ்ய எழுத்தாளர் (இ. 1881)
1937 – ப. ஆப்டீன், ஈழத்து எழுத்தாளர்
1945 – டானியல் ஒர்ட்டேகா, நிக்கராகுவாவின் குடியரசுத் தலைவர்
1974 – லியோனார்டோ டிகாப்ரியோ, அமெரிக்கத் திரைப்பட நடிகர்

இறப்புகள்

1993 – கப்டன் மயூரன், தமிழீழ விடுதலைப் புலிப் போராளி (பி. 1970)
1993 – கப்டன் ஈழமாறன், தமிழீழ விடுதலைப் புலிப் போராளி (பி. 1973)
2004 – யாசர் அரபாத், பாலஸ்தீன விடுதலை இயக்கத் தலைவர், நோபல் பரிசாளர் (பி. 1929)
2005 – பீட்டர் டிரக்கர், ஆஸ்திரிய மேலாண்மை அறிவியலாளர் (பி. 1909)

சிறப்பு நாள்

பொதுநலவாய நாடுகள் – நினைவுறுத்தும் நாள்
போலந்து – விடுதலை நாள் (1918)
அங்கோலா – விடுதலை நாள் (1975)

Popular Feed

Recent Story

Featured News