Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Sunday, November 10, 2019

தமிழக கூட்டுறவு வங்கியில் வேலை - 300 காலியிடங்கள்!


சென்னையில் உள்ள தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு சங்கங்கள், ஊரக வளர்ச்சி வங்கிகளில் காலியாக உள்ள உதவியாளர், இளநிலை உதவியாளர் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு கல்வித் தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.



பணிகள்:
1. உதவியாளர்
2. இளநிலை உதவியாளர்

காலிப்பணியிடங்கள்:
1. உதவியாளர் - 291
2. இளநிலை உதவியாளர் - 09

மொத்தம் = 300 காலியிடங்கள்

முக்கிய தேதிகள்:
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 22.11.2019, மாலை 05.45 மணி வரை
எழுத்துத் தேர்வு நடைபெறும் நாள்: 29.12.2019

வயது: (01.01.2019 அன்றுக்குள்)
1. குறைந்தபட்சம், 18 வயது பூர்த்தி அடைந்தவராக இருத்தல் வேண்டும். 2. ஓ.சி வகுப்பினருக்கான அதிகப்பட்ச வயது வரம்பு - 30 வயது
3. எஸ்.சி / எஸ்.டி / பி.சி / எம்.பி.சி வகுப்பினர் / முன்னாள் ராணுவத்தினர் / மாற்றுத்திறனாளிகள் / விதவைகள் போன்றோருக்கு வயது வரம்பு இல்லை.







கல்வித்தகுதி:
குறைந்தபட்சமாக, ஏதேனும் ஒரு இளங்கலை பட்டப்படிப்பு (Any Degree) (10+2+3 Pattern) மற்றும் கூட்டுறவு பயிற்சி முடித்திருத்தல் வேண்டும்.

குறிப்பு:
1. பல்கலைக்கழகங்களால் வழங்கப்படும் பட்டப்படிப்பிற்கு பதிலாக, 15 ஆண்டுகள் ராணுவத்தில் பணி புரிந்தவர்களுக்கு வழங்கப்படும் பட்டப்படிப்பு சான்றிதழ் (Military Graduation) பெற்றுள்ள முன்னாள் ராணுவத்தினர்களும் விண்ணப்பிக்கலாம்.

2. விண்ணப்பதாரர்கள் பள்ளி இறுதி வகுப்பு / மேல்நிலை படிப்பு / பட்டப்படிப்பின் போது தமிழ் மொழியை ஒரு பாடமாக படித்து தேர்ச்சி பெற்றிருத்தல் அவசியம்.



3. கணினி பயன்பாட்டில் அடிப்படை அறிவு பெற்றிருத்தல் வேண்டும்.

ஊதியம்:
குறைந்தபட்சமாக, ரூ.9,300 முதல் அதிகபட்சமாக ரூ.62,000 வரை மாத சம்பளம் வழங்கப்படும்.

தேர்வுக்கட்டணம்: ரூ.250
எஸ்.சி / எஸ்.டி பிரிவினர் / மாற்றுத்திறனாளிகள் / விதவைகள் போன்றோர் தேர்வுக்கட்டணம் செலுத்த தேவையில்லை.

விண்ணப்பிக்கும் முறை:
ஆன்லைனில், https://www.tncoopsrb.in/ - என்ற இணையதள முகவரியில் சென்று விண்ணப்பத்தினை பூர்த்தி செய்யலாம்.

விண்ணப்பிக்க தேவையானவை:





தேர்வு செய்யப்படும் முறை:
1. எழுத்துத் தேர்வு
2. நேர்முகத் தேர்வு

மேலும், இதுகுறித்த முழுத் தகவல்களை பெற, https://www.tncoopsrb.in/doc_pdf/Notification_1.pdf - என்ற இணையதள முகவரியில் சென்று தெரிந்து கொள்ளலாம்.

Popular Feed

Recent Story

Featured News