Join THAMIZHKADAL WhatsApp Groups
'சென்னை பல்கலையில், 1980ம் ஆண்டு முதல் படித்தவர்கள், 'அரியர்' இருந்தால், தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்' என, அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை பல்கலையின் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி, பாண்டியன் வெளியிட்ட செய்தி குறிப்பு:
சென்னை பல்கலையின், தொலைநிலை கல்வி திட்டத்தில், 1980 - 81ம் கல்வி ஆண்டு முதல், தற்போது வரை படித்தவர்களில், யாருக்காவது சில பாடங்கள் தேர்ச்சி பெறாமல், 'அரியர்' இருந்தால், அந்த தேர்வை எழுதி தேர்ச்சி பெறலாம்.இதற்காக, இந்த ஆண்டு டிசம்பர் மற்றும் அடுத்த ஆண்டு மே மாதம், தேர்வில் பங்கேற்கலாம் என, சலுகை திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
டிசம்பர் தேர்வில் பங்கேற்க விரும்புவோர், சென்னை பல்கலையின், www.ideunom.ac.in என்ற இணையதளம் வழியே விண்ணப்பங்களை பெற்று, நவ., 22க்குள் சமர்ப்பிக்கலாம். மேலும், விபரங்களை, பல்கலைக்கு நேரில் வந்தும் தெரிந்துகொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.