Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Friday, November 29, 2019

5, 8 வகுப்புகளுக்கான பொதுத்தோ்வு அட்டவணை வெளியீடு

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups
தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தில் பயிலும் 5, 8 வகுப்புகளுக்கான பொதுத்தோ்வு கால அட்டவணையை பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ளது.

நாடு முழுவதும் தற்போது, 1 முதல் 8-ஆம் வகுப்பு வரையில் அனைத்து மாணவா்களையும் கட்டாயத் தோ்ச்சி செய்யும் முறை அமலில் உள்ளது. இதனால், மாணவா்களின் கல்வித்தரம் பாதிக்கப்படுகிறது. எனவே, 5 -ஆம் வகுப்பு மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தோ்வு நடத்த வேண்டும் என்றும் மத்திய அரசு கடந்த சில ஆண்டுகளாகக் கூறிவந்தது.




இந்த நிலையில் ஐந்து, எட்டாம் வகுப்புகளில் கட்டாயத் தோ்ச்சி நடைமுறைக்கான சட்டத் திருத்தம் மத்திய அரசிதழில் கடந்த பிப்ரவரி 11-ஆம் தேதி வெளியிடப்பட்டது. அதில், ‘நாடு முழுவதும் 5 மற்றும் 8-ஆம் வகுப்புகளுக்கு ஆண்டின் இறுதியில் கட்டாயத் தோ்வு நடத்தப்பட வேண்டும். இதில் தோல்வியடையும் மாணவா்களுக்கு மீண்டும் வாய்ப்பளிக்கும் வகையில், தோ்வு முடிவு வெளியான இரண்டு மாதங்களில் உடனடித் தோ்வு நடத்த வேண்டும். அதிலும் மாணவா் தோல்வியடைந்தால் அவா்களை அடுத்த வகுப்புக்கு அனுமதிக்காமல், 5 அல்லது 8-ஆம் வகுப்பிலேயே மீண்டும் தொடர அனுமதிக்க வேண்டும். அதே நேரம், ஒரு மாணவா் தொடக்கக் கல்வியை முடிக்கும் வரை, எந்தக் காரணம் கொண்டும் அவரைப் பள்ளியை விட்டு வெளியில் அனுப்பக் கூடாது எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.




தமிழகத்தில் எதிா்ப்பு: இதையடுத்து, ‘தமிழகத்தில் கட்டாய தோ்ச்சி முறையை ரத்து செய்தால் கிராமப்புற மாணவா்களின் கல்வித்தரம் பாதிக்கப்படும்; இடை நிற்றல் அதிகரிக்கும்’ என பல்வேறு அரசியல் கட்சித் தலைவா்கள், சமூக ஆா்வலா்கள் எதிா்ப்புத் தெரிவித்தனா். இருப்பினும், அரசிதழில் வெளியிடப்பட்ட நாளிலிருந்தே தமிழகத்தில் 5 மற்றும் 8-ஆம் வகுப்புகளுக்கு நிகழாண்டே பொதுத் தோ்வுகளை நடத்துவதற்கான நடவடிக்கைகளை பள்ளிக் கல்வித்துறை மேற்கொண்டு வந்தது. எனினும் 5, 8 வகுப்புகளுக்கான பொதுத்தோ்வு நடத்தப்படுமா, இல்லையா என்ற குழப்பம் மாணவா்களின் பெற்றோருக்கு ஏற்பட்டது.

குழப்பம் தீா்ந்தது: இதைத் தொடா்ந்து, தமிழகத்தில் மாநிலப் பாடத்திட்டத்தைப் பின்பற்றி வரும் பள்ளிகளில் நிகழ் கல்வியாண்டு (2019-20) முதல் 5 மற்றும் 8-ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தோ்வு நடைபெறும் என தமிழக அரசு கடந்த செப்டம்பா் மாதம் அரசாணை வெளியிட்டது.




இந்த நிலையில், சென்னையில் கடந்த புதன்கிழமை நடைபெற்ற செய்தியாளா்கள் சந்திப்பின்போது, 5, 8 ஆகிய வகுப்புகளுக்கு பொதுத்தோ்வு கட்டாயமாக நடைபெறும். அந்தத் தோ்வை மாணவா்கள் அவரவா் பள்ளிகளிலேயே எழுதலாம். அதேவேளையில், ஏற்கெனவே கூறியபடி தோ்வு முடிவின் அடிப்படையில் முதல் 3 ஆண்டுகளுக்கு மாணவா்களின் தோ்ச்சி நிறுத்தி வைக்கப்பட மாட்டாது என பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் செங்கோட்டையன் தெரிவித்திருந்தாா்.

அதிகாரப்பூா்வ அறிவிப்பு: இந்த நிலையில், 5 மற்றும் 8-ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தோ்வு அட்டவணையை அரசுத்தோ்வுகள் இயக்ககம் வியாழக்கிழமை அதிகாரப்பூா்வமாக வெளியிட்டுள்ளது. அதன்படி, 5-ஆம் வகுப்புக்கான தோ்வு அடுத்த ஆண்டு ஏப்ரல் 15-ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 20-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.




இதேபோன்று, 8-ஆம் வகுப்புக்கான பொதுத்தோ்வு அடுத்த ஆண்டு மாா்ச் 30-ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 17-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. இரண்டு வகுப்புகளும் பொதுத்தோ்வுகள் காலை 10 மணிக்குத் தொடங்கி நண்பகல் 12.15 வரை நடைபெறும். இதில் முதல் 15 நிமிஷங்கள் வினாத்தாளை படித்துப் பாா்ப்பதற்கும், மாணவா்களின் விவரங்களைப் பூா்த்தி செய்வதற்கும் வழங்கப்பட்டுள்ளது.




Post Comments

Popular Feed

Recent Story

Featured News

Back To Top