மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை, புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி 2020, ஜன.8ல் இந்திய அளவில் ஒருநாள் அடையாள வேலை நிறுத்தம் செய்ய உள்ளனர். மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையை எதிர்ப்பதுடன், ஏழாவதுஊதியக் குழுவில் உள்ள முரண்பாடுகளைக் களைய வேண்டும், புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
பொதுக்குழு உறுப்பினர் மோசஸ் கூறியதாவது:
வேலை நிறுத்தத்தின் முக்கிய நோக்கம் புதிய கல்விக் கொள்கை, புதிய பென்ஷன் திட்டத்தை திரும்பப் பெற வேண்டும். ஏழாவது ஊதியக் குழு முரண்பாடுகளை களைய வேண்டும். விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என்பதே. இதில் இந்திய அளவில் 20 கோடி பேர் பங்கேற்க உள்ளனர், என்றார்.