Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Thursday, November 7, 2019

மதிய உணவின் தரத்தை உயர்த்த தமிழக அரசு முடிவு தொடக்கப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு காலை சிற்றுண்டி  உணவு வகைகளில் மாற்றம் கொண்டு வரவும் பரிசீலனை

அரசுப்பள்ளிகளில் வழங்கப்படும் சத்துணவின் தரத்தை மேம்படுத்தி, காலை சிற்றுண்டி வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. மேலும், மாணவர்களுக்கு பிடித்தபடி உணவு வகைகளில் மாற்றம் செய்யவும் திட்டமிட்டிருப்பதாக தக வல்கள் வெளியாகியுள்ளன. தமிழகத்தில் பள்ளிக் கல்வித் துறையின்கீழ் 37,211 அரசுப் பள்ளிகள், 8,357 அரசு உதவி பெறும் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் சுமார் 69 லட்சம் மாணவ, மாணவியர் படிக்கின்றனர். அவர்களுக்கு மதிய வேளையில் ஊட்டச்சத்து நிறைந்த கலவை சாதங்கள், பயறு, முட்டை, வாழைப்பழம், காய்கறிகள் என 13 வகையான உணவுகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த திட்டத்துக்காக ரூ.800 கோடி வரை தமிழக அரசு செலவிடுகிறது.



இந்நிலையில், பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் கூறியதாவது: நாடு முழுவதும் 12 லட்சம் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி களில் 1 முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் 10 கோடி மாணவர்களுக்கு உணவு வழங்கப்படுகிறது. இதற்கு மத்திய அரசு 60 சதவீதமும் மாநில அரசு 40 சதவீதமும் நிதி பங்களிப்பு செய்கின்றன. 8-ம் வகுப்பு வரை இருக்கும் இந்தத் திட்டத்தை தற்போது 9 மற்றும் 10-ம் வகுப்புகளுக்கும் நாடுமுழு வதும் விரிவுபடுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கு தேவை யான ரூ.4,400 கோடியை ஒதுக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.



இருப்பினும், தமிழகத்தில் ஏற் கெனவே 9, 10-ம் வகுப்புகளுக்கு மாநில அரசின் முழு நிதி பங்களிப்பில் சத்துணவுத் திட்டம் செயல்பாட்டில் உள்ளது. மத்திய அரசு மூலம் கிடைக்கவுள்ள கூடு தல் நிதியைக் கொண்டு சத் துணவின் தரத்தை மேம்படுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
இதுதவிர சத்துணவில் காலை சிற்றுண்டி வழங்க முடிவாகியுள் ளது. முதல்கட்டமாக 24,301 அரசு தொடக்கப் பள்ளிகளில் இந்த திட் டம் செயல்படுத்தப்படும்.



தினமும் 100 கிராம் அளவில் வெவ்வேறு வகை உணவுகள் வழங்கப்படும். இதற்கு ஆண்டு தோறும் ரூ.400 கோடி வரை செலவாகும். இதற்கிடையே அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாண வர்களுக்கு ஊட்டச்சத்து குறை பாட்டை போக்க தினமும் பால் (200 மிலி) சேர்த்து வழங்குவதற்கான முயற்சிகளும் நடைபெற்று வருகின் றன. மத்திய அரசிடம் கூடுதல் நிதி கோரப்பட்டுள்ளது. இந்த திட்டம் விரைவில் நிறைவேற்றப்படும்.

Popular Feed

Recent Story

Featured News