Join THAMIZHKADAL WhatsApp Groups
அம்பேத்கர் விருது பெற விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாட்டில் ஆதிதிராவிடர்களின் முன்னேற்றத்திற்காக தங்களை இணைத்துக்கொண்டு அவர்கள் ஆற்றிவரும் தொண்டுகளை கருத்தில் கொண்டு, ஒருவருக்கு ஆண்டுதோறும் அம்பேத்கர் விருது வழங்கி தமிழக அரசு சிறப்பித்து வருகிறது.
அந்த வகையில், 2020ம் ஆண்டு திருவள்ளுவர் திருநாளன்று அம்பேத்கர் விருது பெற விரும்புவோர் தங்களை பற்றிய முழு விவரங்களுடன் விண்ணப்பிக்கலாம். www.tn.gov.in/ta/forms/Deptname/1 என்ற இணையதளத்தில் இருந்து விருதுக்கான விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். சென்னை ஆதிதிராவிடர் நல இயக்குநர் அலுவலகத்தில் அல்லது சம்பந்தப்பட்ட மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்திலும் விண்ணப்ப படிவத்தை பெற்றுக் கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.