Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Saturday, November 9, 2019

விஐடி பல்கலைக்கழகத்தில் பி.டெக் படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் விற்பனை வேந்தர் விசுவநாதன் தொடங்கி வைத்தார் 

விஐடி பல்கலைக் கழகத்தில் பி.டெக் பொறியிsயல் படிப்புகளுக் கான நுழைவுத் தேர்வு விண்ணப் பப் படிவங்களை தபால் நிலையங் கள் மூலம் விற்பனை செய்யும் பணியை வேந்தர் விசுவநாதன் தொடங்கி வைத்தார். விஐடி பல்கலைக் கழகத்தில் 2020-ம் கல்வியாண்டுக்கான பி.டெக் பொறியியல் படிப்புகளுக் கான நுழைவுத் தேர்வு விண்ணப்ப விற்னை நேற்று தொடங்கப்பட்டது. வேலூர் தலைமை தபால் நிலையத்தில் விண்ணப்பப் படிவங் கள் விற்பனையை வேந்தர் கோ.விசு வநாதன் தொடங்கி வைத்தார்.

அப்போது, விஐடி துணைத் தலைவர் சேகர் விசுவநாதன், செயல் இயக்குநர் சந்தியா பெண்ட்ட ரெட்டி, இணை துணை வேந்தர் நாராயணன், மாணவர் சேர்க்கை இயக்குநர் கலைச்செல்வன், வேலூர் கோட்ட அஞ்சலகங்களின் கண்காணிப்பாளர் கோமல் குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். விஐடி வேலூர், சென்னை, அமராவதி, போபால் வளாகங் களில் பல்வேறு பொறியியல் பாடப்பிரிவுகளுக்கான நுழைவுத் தேர்வு நடத்தப்பட உள்ளது.  அடுத்த ஆண்டு ஏப்ரல் 13-ம் தேதி முதல் 19-ம் தேதி வரை ஆன்லைன் முறையில் தேர்வு நடைபெறும். இந்தியாவின் 124 முக்கிய நகரங்கள், துபாய், குவைத், மஸ்கட் மற்றும் கத்தார் உள்ளிட்ட வெளிநாடுகள் என மொத்தம் 175 மையங்களில் நுழைவுத் தேர்வு நடைபெறுகிறது.

நுழைவுத் தேர்வு விண்ணப்பங்கள் நாடு முழுவதும் உள்ள முக்கியமான 22 தபால் நிலையங்கள் மூலம் விற்பனை செய்யப்படுகின்றன. விண்ணப்பக் கட்டணம் ரூ.1,250 செலுத்தியும் Vellore Institute Of Technology என்ற பெயரில் ரூ.1,250-க்கான வங்கி வரைவோலையை செலுத்தியும் நேரில் பெற்றுக் கொள்ளலாம். ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க விரும்புவோர் www.vit.ac.in என்ற இணையதளத்தின் மூலம் ரூ.1,150 செலுத்தியும் விண்ணப்பிக்கலாம். நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 29-ம் தேதி கடைசி நாளாகும். இது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு www.vit.ac.in என்ற இணையதளத்தில் அறியலாம்.

Popular Feed

Recent Story

Featured News