கொழுஞ்சிச் செடியைக் கொழஞ்சிச் செடி என்றும் கூறுவர். இது பட்டாணி வகையைச் சார்ந்த ஒரு பூக்கும் தாவரமாகும். இது ஆணிவேர் கொண்ட ஒரு செடி. வறண்ட நிலத்தில் ஓரிரு மழைத் தூறல்கள் இருந்தாலே போதும் நன்கு வளரும். நன்செய் வயல்களில் மிதித்து இதனைத் தழை-உரமாகப் பயன்படுத்துவர். இந்தத் தழையுரம் போட்ட இடத்தில் நெற்பயிர் பிற தழையுரம் போட்ட இடத்தைவிட மிகச் செழிப்பாக வளரும். விளைச்சல் நன்றாக இருக்கும். இது இந்தியா மற்றும் இலங்கையில் பொதுவாக காணப்படுகிறது. இதன் வேர் நாட்டு மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது.
மருத்துவப் பயன்கள்:
கொழுஞ்சியின் முழுத்தாவரமும் மருத்துவத்திற்குப் பயன்படுகின்றன. இது, மனிதர்களுக்கு உண்டாகும் மிதமான பேதி மற்றும் – பூச்சினை அகற்ற உதவுகிறது. கொழுஞ்சியின் விதைகளின் – சாறு, வயிற்றில் பூச்சிகள் உண்டாவதைத் தடுக்கும். குறிப்பாக குழந்தைகளின் தோல் வியாதிகளுக்குப் புறப்பூச்சாகப் பயன்படும். கொழுஞ்சியின் வேர் செரிமானம், தீராத வயிற்றுப்போக்கு இவற்றைக் குணப்படுத்தும்; பட்டை மிளகுடன் பொடித்து வயிற்று வலிக்கு மருந்தாவம் பயன்படுத்தலாம்.