மாநில தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பிற்கு பதிவு செய்ய இளைஞர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது தமிழக அரசு.
இதுகுறித்து அரசு வெளியிட்டிருக்கும் அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, 'வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் கீழ் சென்னை கிண்டியில் மாநில தொழில்நெறி வழிகாட்டும் மையம் செயல்பட்டு வருகிறது. இம்மையம் இளைஞர்களுக்கு விரிவான சேவையை வழங்குவதோடு அவர்களை வேலைக்கு அமர்த்தும் நோக்கத்துடன் செயல்பட்டு வருகிறது.
மாநில தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் செயல்பாடுகளில் சில: 1. உள மதிப்பீடு சோதனைகள்
2. தொழில்நெறி ஆலோசகர்களால் வழங்கப்படும் உரிய ஆலோசனைகள். 3. அரசுப் போட்டித் தேர்வுக்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள்
4. தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்கள்.
இதில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ள மற்றும் தனியார்த்துறை வேலைவாய்ப்பினை பெற விரும்பும் இளைஞர்களின் விவரங்கள் சேகரிக்கப்படுகின்றன.
இதில் பதிவு செய்யும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு முகாம்கள் குறித்த விவரங்கள் அவ்வப்போது மின்னஞ்சல் (இ-மெயில்) மூலம் அனுப்பி வைக்கப்படும்.
இச்சேவை மையத்தைப் பயன்படுத்திக் கொள்ள விரும்பும் மனுதாரர்கள் https://tnvelaivaaippu.gov.in/pdf/job_seeker_details.pdf இந்த கூகுள் லிங்கைப் பயன்படுத்தி தங்களது விவரங்களை பதிவு செய்யலாம் என்று கூறப்பட்டுள்ளது.