Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Sunday, November 10, 2019

தேசிய மாற்றுத்திறனாளிகள் மறுவாழ்வு மையத்தில் வேலை வேண்டுமா?


செகந்தராபாத்தில் செயல்பட்டு வரும் தேசிய மாற்றுத்திறனாகள் மறுவாழ்வு மையத்தில் நிரப்பப்பட உள்ள தட்டச்சர், கணக்காளர் போன்ற பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் 15 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.



மொத்த காலியிடங்கள்: 08

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: LDC/Typist - 01
பணி: Assistant Professors - 02
பணி: Principal - 01
பணி: Workshop Supervisors-cum-store Keeper - 01

வயதுவரம்பு: 15.11.2019 தேதியின்படி 18 முதல் 45 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி, இளங்கலை, முதுகலை பட்டம் பெற்று 10 ஆண்டுகள் பணி அனுபவம் உள்ளவர்கள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.



விண்ணப்பக் கட்டணம்: ரூ.500. எஸ்சி, எஸ்டி, பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளி விண்ணப்பத்தாரர்கள் கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. கட்டணத்தை தேசிய மயமாக்கப்பட்ட ஏதாவதொரு வங்கிகளில் டிடி.யாக எடுத்து செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: http://www.niepid.nic.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: "The Director, NIEPID, Manovikasnagar, Secunderabad 500 009".



மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.niepid.nic.in/emp%20022019/dn_msec_dvg.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 15.11.2019

Popular Feed

Recent Story

Featured News