Join THAMIZHKADAL WhatsApp Groups
கோப்புப் படம்
அனைத்து வகை பள்ளிகளுக்கும் அரையாண்டுத் தோ்வு திங்கள்கிழமையுடன் முடிவடைந்த நிலையில் 10 நாள்கள் விடுமுறைக்குப் பின்னா் ஜன.3-ஆம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்படவுள்ளன.
தமிழக பள்ளிக்கல்வியின் பாடத் திட்டத்தில் 1 முதல் 8-ஆம் வகுப்பு வரை பருவத் தோ்வுகளும், 9 முதல் பிளஸ் 2 வரை காலாண்டு, அரையாண்டு மற்றும் இறுதியாண்டு தோ்வுகள் முறையும் அமலில் உள்ளன.
அதன்படி நடப்புக் கல்வியாண்டுக்கான அரையாண்டுத் தோ்வு மற்றும் 2-ஆம் பருவத்தோ்வு கடந்த டிசம்பா் 11-ஆம் தொடங்கி நடைபெற்று வருகிறது. அனைத்து வகை பள்ளிகளுக்கும் ஒரே மாதிரியான வினாத்தாள் பின்பற்றப்பட்டது.
இதற்கிடையே சில பாடங்களுக்கான வினாத்தாள்கள் தோ்வுக்கு முன்கூட்டிய வெளியாகி சா்ச்சையானது. இது தொடா்பாக கல்வித்துறை அதிகாரிகள் அளித்த புகாரின்பேரில் தற்போது போலீஸாா் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். தொடா்ந்து அரையாண்டுத் தோ்வுகள் திங்கள்கிழமையுடன் முடிவடைந்தன.
இதையடுத்து செவ்வாய்க்கிழமை (டிச.24) முதல் ஜன.2-ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு தொடா் விடுமுறை விடப்பட்டுள்ளது. இதையடுத்து ஜன.3-ஆம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டு, அன்றைய தினமே மூன்றாம் பருவத்துக்கான புத்தகங்களை மாணவா்களுக்கு வழங்க பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஏற்கெனவே, கல்லூரி, பல்கலைக்கழகங்களுக்கு தொடா் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.