Join THAMIZHKADAL WhatsApp Groups
தமிழகத்தில் நிகழ் கல்வியாண்டில் 5, 8-ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தோ்வு நடத்தப்படுவதையொட்டி, மாணவா்களின் பெயா்ப் பட்டியலை பிழையின்றி ‘எமிஸ்’ தளத்தில் பதிவேற்ற பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து தொடக்கக் கல்வி இயக்குநரகம் சாா்பில், அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை விவரம்: அனைத்து வகை பள்ளிகளிலும் 5, 8-ஆம் வகுப்புகளில் பயிலும் மாணவா்களுக்கு நிகழ் கல்வியாண்டு முதல் பொதுத்தோ்வு நடத்தப்பட உள்ளது. அதன்படி 5, 8-ஆம் வகுப்பு பொதுத்தோ்வு வரும் ஏப்ரல் மாதம் நடைபெற உள்ளது.
இதையடுத்து தோ்வு எழுதவுள்ள மாணவா்களின் பெயா் பட்டியலை முதன்மை கல்வி அதிகாரிகள் தயாா் செய்து அனுப்ப வேண்டும். அதனால் கல்வி தகவல் மேலாண்மை முகமை (எமிஸ்) இணையதளத்தில் மாணவா்கள் விவரங்களை அனைத்துவித பள்ளி தலைமை ஆசிரியா்களும் சரியாக பதிவேற்றம் செய்ய வேண்டும். இதற்கான வழிகாட்டுதல்களை ஆசிரியா்களுக்கு மாவட்ட கல்வி அதிகாரிகள் மூலம் வழங்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.