5 மற்றும் 8ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தப்பட்டாலும் மூன்று ஆண்டுகளுக்கு அனைவரும் தேர்ச்சி பெறுவர்கள் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
ஈரோட்டில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், 5 மற்றும் 8ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தப்பட்டாலும் மூன்று ஆண்டுகளுக்கு அனைவரும் தேர்ச்சி பெறுவர்கள்.மூன்று ஆண்டுகளில் மாணவர்கள் பொதுத்தேர்வுக்கு தயாராக வேண்டும்.மூன்று ஆண்டுகளில் மாணவர்கள் தரம் குறித்து கண்காணிக்கப்படும்.அரசு பள்ளி தரம் குறைந்துள்ளதாக விமர்சனம் எழுந்துள்ளதால், அதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
மேலும் தேவைப்பட்டால் கூடுதல் கால அவகாசம் வழங்கப்படும். காலை மாலை என்று இரு வேளைகளிலும் மாணவர்களுக்கு உற்பயிற்சி அளிக்கவும் மற்றும் வாரத்தில் ஒரு நாள் ஆங்கிலம் கற்றுத்தரவும் பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.