Join THAMIZHKADAL WhatsApp Groups
மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான பிராட் காஸ்ட் என்ஜினியரிங் கன்சல்டன்ட்ஸ் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள செவிலியர், கண்காணிப்பாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 98 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ள நிலையில் சம்மந்தப்பட்ட பிரிவில் பாராமெடிக்கல் முடித்தவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
நிர்வாகம் : பிராட் காஸ்ட் என்ஜினியரிங் கன்சல்டன்ட்ஸ் இந்தியா லிமிடெட்
மேலாண்மை : மத்திய அரசு
மொத்த காலிப் பணியிடம் : 98
பணியிட விபரங்கள்:
Public Health Nurse (PHN) - 15
ஊதியம் : மாதம் ரூ.38,000
Catering Supervisor - 01
ஊதியம் : மாதம் ரூ.20,000
Auxiliary Nursing Midwife (ANM) - 60
ஊதியம் : மாதம் ரூ.24,000
Dresser - 12
ஊதியம் : மாதம் ரூ.18,000
Dietician - 01
ஊதியம் : மாதம் ரூ.35,000
Cook - 01
ஊதியம் : மாதம் ரூ. 18,000
Mortuary Attendant(MTS) - 07
ஊதியம் : மாதம் ரூ.18,000
Receptionist - 01
ஊதியம் : மாதம் ரூ.20,000
கல்வித் தகுதி :
10 மற்றும் 12ம் வகுப்பு தேர்ச்சியுடன் தொடர்புடையப் பிரிவில் பாராமெடிக்கல் முடித்தவர்கள் பி.எஸ்சி (நர்சிங்) முடித்தவர்கள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். (குறிப்பிட்ட சில பணியிடங்களுக்கு ஏற்ப கல்வித் தகுதி மாறுபடுவதால் அதிகாரப்பூர்வ அறிவிப்பைக் காணவும்.)
விண்ணப்பக் கட்டணம் :
பொது மற்றும் ஓபிசி பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு ரூ.500
எஸ்சி, எஸ்.டி, மாற்றுத்திறனாளிகள் பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு - ரூ.250
விண்ணப்பக் கட்டணம் செலுத்தும் முறை : கட்டணத்தைத் தில்லியில் மாற்றத்தக்க வகையில் BROADCAST ENGINEERING CONSULTANTS INDIA LIMITED என்னும் பெயருக்கு டி.டி.யாக எடுத்து செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை : தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் www.becil.com என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து கீழ்கண்ட முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி :
Deputy General Manager (HR) in BECIL's Corporate Office at BECIL Bhawan, C-56/A-17, Sector-62, Noida-201307 (U.P).
விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி : 25.12.2019 தேதிக்குள் கிடைக்கும் வகையில் விண்ணப்பிக்க வேண்டும்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://www.becil.com/uploads/vacancy/b3b51bc5e8b7bb7adcc75bfb83401626.pdf?utm_source=DH-MoreFromPub&utm_medium=DH-app&utm_campaign=DH என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.