Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Monday, December 2, 2019

ஆசிரியர் பற்றாக்குறை இனி இருக்காது - பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன்

ஆசிரியர் பற்றாக்குறை என்பதே, தமிழகத்தில் இனி இருக்காது,'' என, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.ஈரோடு, நம்பியூரில் நேற்று அவர் கூறியதாவது:




தமிழகத்தில், மோசமாக உள்ள துவக்க மற்றும் நடுநிலைப் பள்ளி கட்டடங்கள் குறித்து, முதல்வரின் கவனத்துக்கு கொண்டு சென்று, நடவடிக்கை மேற்கொள்ளப்படும். ஆசிரியர் பற்றாக்குறை என்பதே, தமிழகத்தில் இனி இருக்காது. அந்தளவுக்கு வரும் பிப்ரவரி மாதத்துக்கு பின், அனைத்து ஆசிரியர் காலி பணியிடங்களும் நிரப்பப்படும். பட்டதாரி ஆசிரியர்கள், 2,472 பேர் தற்போது நியமிக்கப்பட்டுள்ளனர்.




விரைவில் கணினி ஆசிரியர் மற்றும் சிறப்பு ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர். 'லேப் அசிஸ்டன்ட்' பணிக்காக, 4,017 பேர் தேர்வு எழுதியுள்ளனர்.ஆசிரியர் பதவி உயர்வுக்கான பணி தற்போது நடக்கிறது. உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்களை, உடனடியாக நிரப்ப வேண்டியுள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்

Popular Feed

Recent Story

Featured News