Thamizhkadal WhatsApp Channel

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Monday, December 23, 2019

அரையாண்டு விடுமுறைக்கு பின் மீண்டும் பள்ளித் திறக்கும் நாளன்று தலைமையாசிரியர்களுக்கான அறிவுரைகள்:

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups
விழுப்புரம் வருவாய் மாவட்டத்தில் அமைந்துள்ள அனைத்து வகைப் பள்ளிகளுக்கும் எதிர்வரும் 24 . 12 2019 முதல் 01 . 01 . 2020 வரை அரையாண்டு விடுமுறை எனவும் , அரையாண்டு விடுமுறைக்கு பின் மீண்டும் 02 . 01 . 2020 முதல் செயல்படும் எனவும் , மேலும் பள்ளித் திறக்கும் நாளன்று கீழ்க்கண்ட அறிவுரைகளை பின்பற்றபட வேண்டும் எனவும் அனைத்து வகை பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதல்வர்களுக்கும் திட்டவட்டமாக தெரிவிக்கப்படுகிராது .




1 . பள்ளித் திறக்கும் நாளன்று பள்ளி வளாகம் தூய்மையாக இருத்தல் வேண்டும் , மேலும் குடிநீர் தொட்டி சுத்தம் செய்யப்பட்டு , சுகாதாரமான முறையில் குடிநீர் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் .
2 . அரையாண்டு விடுமுறை நாட்களில் அரசு விடுமுறை நாட்கள் தவிர மற்ற வேலை நாட்களில் தலைமை ஆசிரியர்கள் பள்ளிகளில் கட்டாயம் இருத்தல் வேண்டும் எனவும் தெரிவிக்கப்படுகிறது .
3 . 1 முதல் 8 முடிய பயிலும் மாணவர்களுக்கான மூன்றாம் பருவத்திற்கான விலையில்லா பாட புத்தங்களை , மாவட்டக் கல்வி அலுவலர் வட்டாரக் கல்வி அலுவலரால் தெரிவிக்கப்படும் நாட்களில் பெற்று சென்று பாதுகாப்பான முறையில் பள்ளிகளில் வைத்திருந்து பள்ளி திறக்கும் நாளில் மாணவர்களுக்கு வழங்கப்பட வேண்டும் எனவும் அனைத்து பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது .




4 . பள்ளித் திறக்கும் நாளான்று 10 , 11 மற்றும் 12 அம் வகுப்பு மாணவர்களின் அரையாண்டு பொதுத்தேர்வின் விடைத்தாட்கள் வழங்கப்படவேண்டும் .
5 . 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வின் தேர்ச்சி முடிவுகளின் விவரத்தினை விழுப்புரம் முதன்மைக் கல்வி அலுவரின் இணையதளத்தில் 02 . 01 . 2020 அன்று பிற்பகல் 2 . 00 மணிக்குள் கட்டாயமாக பதிவேற்றம் செய்யப்படவேண்டும் .




Popular Feed

Recent Story

Featured News