Join THAMIZHKADAL WhatsApp Groups
தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் நாளை ( 23ம் தேதி) வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிட உள்ளதாக அறிவித்துள்ள நிலையில், இதில் திருத்தம் செய்வதற்கு வசதியாக, வாக்காளர் பட்டியலில், பெயர் சேர்க்க, நீக்க மற்றும் மாற்றம் செய்ய, ஜனவரி, 4, 5, 11 மற்றும் 12ம் தேதிகளில், தமிழகம் முழுவதும், சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளதாக அறிவித்துள்ளது.
இந்த முகாம்களுக்கு சென்று பெயரை சேர்க்கவோ, நீக்கவோ, மாற்றமோ செய்துகொள்ளலாம்.
பெயர் சேர்க்க படிவம் 6
பெயர் நீக்க படிவம் 7
தவறான பதிவை திருத்த படிவம் 8
இடமாற்றம் படிவம் 8ஏ உள்ளிட்டவைகளை நிரப்பி தர வேண்டும்.
இந்த முகாம்களுக்கு செல்ல இயலாதவர்கள் www.nvsp.in/Account/Login என்ற இணையதளத்தின் மூலம் மேற்கண்ட மாற்றங்களை செய்துகொள்ளலாம்.