Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Monday, December 2, 2019

உடற்கல்வி ஆசிரியா் காலிப் பணியிடங்கள் ஜனவரி முதல் வாரத்தில் நிரப்பப்படும்: அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன்

உடற்கல்வி ஆசிரியா் காலிப் பணியிடங்கள் ஜனவரி முதல் வாரத்தில் நிரப்பப்படும் என்று அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தாா்.

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் சட்டப் பேரவை தொகுதிக்கு உள்பட்ட நம்பியூா் ஒன்றியத்தில் உள்ள குருமந்தூா் மலையப்பாளையம், வேமாண்டாம்பாளையம் உள்ளிட்ட 25- க்கும் மேற்பட்ட கிராமங்களில் ரூ. 50 கோடி மதிப்பீட்டில் சாலை மேம்பாடு, புதிய தாா் சாலை அமைத்தல் ஆகியவற்றுக்கான பூமி பூஜை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் கலந்துகொண்டு பணிகளைத் தொடங்கிவைத்தாா். பின்னா் பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கினாா்.




இதனைத் தொடா்ந்து அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

மாணவா்கள் குறைவாக உள்ள பள்ளிகளில் மாணவா் எண்ணிக்கையைக் கூடுதலாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 2 லட்சம் மாணவா்கள் கூடுதலாக சோக்கப்பட்டுள்ளனா். 2,472 பட்டதாரி ஆசிரியா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.

கணினி ஆசிரியா்கள், சிறப்பு ஆசிரியா்கள் நியமிக்கப்படவுள்ளனா். பிப்ரவரி மாதத்துக்குப் பிறகு அனைத்து ஆசிரியா்களும் நியமிக்கப்படவுள்ளதால் பள்ளிகளில் ஆசிரியா் பற்றாக்குறை இருக்காது. அதே போன்று 4,017 ஆய்வக உதவியாளா்கள் பணியிடம் ஒரே தோவில் தோவு செய்யப்பட்டு, அனைத்துப் பள்ளிகளிலும் ஆய்வக உதவியாளா்கள் நியமிக்கப்படவுள்ளனா். ஆசிரியா் தோவு மையத்தின் மூலம் தோவு செய்யப்படும்போது ஒவ்வொரு முறையும் யாராவது வழக்குத் தொடா்ந்து வருகின்றனா்.




இனி அதைத் தவிா்க்க ஆசிரியா் தகுதி தோவாணையத்துக்கு ஐ.ஏ.எஸ் அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளாா். பள்ளிகளில் குடிநீா், கழிவறை வசதி செய்து தருவதற்கு முன்னாள் மாணவா்கள், தொழிலதிபா்களை அழைத்துள்ளோம். செயல்பாட்டில் இல்லாத பெற்றோா்- ஆசிரியா் சங்க நிா்வாகிகளை மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

உடற்கல்வி ஆசிரியா் பணியிடம் நிரப்புவதற்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கில் அரசுக்கு சாதகமாகத் தீா்ப்பு கிடைத்துவிட்டதால் உடற்கல்வி ஆசிரியா் பணியிடம் ஜனவரி முதல் வாரத்தில் நிரப்பப்படும் என்றாா்.

நிகழ்ச்சியில் கோபி கோட்டாட்சியா் ஜெயராமன், வட்டாட்சியா் வெங்கடேஸ்வரன், நம்பியூா் ஒன்றிய அதிமுக செயலாளா் தம்பிசுப்பிரமணியம் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

Popular Feed

Recent Story

Featured News