யு.ஜி.சி., எனப்படும், பல்கலை மானிய குழு றிவித்துள்ளதாவது: தொலை நிலை கல்வியில், ரியல் எஸ்டேட், ஓட்டல் மேலாண்மை ஆகியவற்றுக்கான பாடங்களுக்கு, 2019 - 20ம் கல்வியாண்டு முதல் தடை விதிக்கப்படுகிறது. ஆனாலும், ஏற்கனவே இந்த பாடங்களில் சேர்ந்தவர்கள், அதை தொடர்ந்து படிக்கலாம். அதற்கு எந்த தடையும் இல்லை. இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல்கலை மீது குற்றச்சாட்டுஅசாம் மாநிலத்தில் உள்ள கவுகாத்தி பல்கலையின் செயல்பாடு குறித்து, மத்திய கணக்கு தணிக்கை அதிகாரி தாக்கல் செய்து உள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: கவுகாத்தி பல்கலை நிர்வாகம், அங்கீகரிக்கப்படாத, 21 பாட வகுப்புகளில், 74 ஆயிரம் மாணவர்களை சேர்த்துள்ளது. இதன் மூலம், கட்டணமாக, 39 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. இந்த மாணவர்கள் படிக்கும் பாட வகுப்புகள், அங்கீகாரம் பெறாதவை என்பதால், அவர்களது எதிர்காலம் பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கு, கவுகாத்தி பல்கலை நிர்வாகம் தான் காரணம். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.