Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Sunday, December 1, 2019

எஸ்.டி. மாணவர்களுக்கான போஸ்ட் மெட்ரிக் உதவித்தொகைகள் உயர்த்தி அறிவிப்பு.

மாணவர்கள் மேற்கொள்ளும் படிப்புகள், குரூப்-1, குரூப்-2, குரூப்-3, குரூப்-4 என்று நான்கு வகைப்படுதப்பட்டு, அதற்கேற்ப உதவித்தொகை வரையறுக்கப்பட்டுள்ளன.
குரூப்-1 படிப்புகள் - மருத்துவம்(அலோபதிக், இந்திய மற்று பிற அங்கீகரிக்கப்பட்ட மருத்துவ படிப்புகள்), பொறியியல், தொழில்நுட்பம், திட்டமிடுதல், கட்டிடக்கலை, வடிவமைப்பு, பேஷன் தொழில்நுட்பம், விவசாயம், கால்நடை மற்றும் துணைநிலை அறிவியல்கள், மேலாண்மை, வணிக நிதி/நிர்வாகம், கணிப்பொறிஅறிவியல்/பயன்பாடுகள் ஆகியவற்றில் இளநிலை, முதுநிலை, எம்.பில் மற்றும் பிஎச்.டி படிப்புகளைமேற்கொள்பவர்கள்.
வணிக பைலட் லைசன்ஸ்(ஹெலிகாப்டர் பைலட் மற்றும் மல்டிஎஞ்சின் ரேட்டிங்) படிப்பு, மேலாண்மை மற்றும்மருத்துவ படிப்புகளில், பலவித பிரிவுகளில், முதுநிலை டிப்ளமோ படிப்புகள். இவைத்தவிர, சி.ஏ/ஐ.சி.டபிள்யூ.ஏ/சி.எஸ்/ஐ.சி.எப்.ஏ. மற்றும் எல்.எல்.எம். போன்றவை.




குரூப்-2 படிப்புகள் - பார்மசி, நர்சிங், எல்.எல்.பி., பி.எப்.எஸ் மற்றும் இதர துணைநிலை மருத்துவ படிப்புகளான புனர்வாழ்வு, பரிசோதனை மற்றும் பொது மக்கள் தொடர்பு, ஹோட்டல் மேலாண்மை மற்றும் சமையல் கலை, டிராவல்/சுற்றுலா/விருந்தோம்பல் மேலாண்மை, உட்புற அலங்காரம், சத்துணவு மற்றும் உணவுக் கட்டுப்பாடு, வணிக வரைகலை, நிதி சேவைகள் போன்ற படிப்புகளில் இளநிலை, முதுநிலை மற்றும் சான்றிதழ்படிப்புகளை மேற்கொள்பவர்கள். (மேற்சொன்ன படிப்புகளில், மேல்நிலை பள்ளிப் படிப்பை தகுதியாக வைத்துசேர்ந்திருக்க வேண்டும்).
குரூப் - 3 படிப்புகள் - இளநிலை பட்டப்படிப்பு என்ற நிலையில் வரும் பி.ஏ./பி.எஸ்சி மற்றும் பி.காம். போன்றபடிப்புகளை மேற்கொள்பவர்கள். இந்த பிரிவில், குரூப்-1 மற்றும் குரூப்-2 பிரிவில் வரும் படிப்புகள்இடம்பெறாது.




குரூப் - 4 - பள்ளிப்படிப்பை முடித்த பிறகு மேற்கொள்ளும், ஐ.ஐ.டி. மற்றும் டிப்ளமோ போன்ற பட்டப் படிப்புஅல்லாத படிப்புகள் இந்த பிரிவில் சேரும். இந்த படிப்புகளுக்கு உயர்நிலைக் கல்வித் தகுதியே(10 ம் வகுப்பு) போதும்.
உதவித்தொகை பெறும் எஸ்.டி. மாணவர்களது பெற்றோர்களின் ஆண்டு வருமான வரம்பும்உயர்த்தப்பட்டுள்ளன. அதன்படி, முன்பு இருந்த 1.45 லட்சம் வரம்பிலிருந்து, 2 லட்சம் என்ற அளவில் வருமானவரம்பு உயர்தப்பட்டுள்ளது.




எஸ்.டி. மாணவர்களுக்கான இந்த உதவித்தொகை திட்டங்களின்கீழ், கடந்த 2007-08 ம் ஆண்டில் 10.41 லட்சம்மாணவர்களும், 2008-09 ம் ஆண்டில் 12.57 லட்சம் மாணவர்களும், 2009-10 ம் ஆண்டில் 13.76 லட்சம்மாணவர்களும் பயனடைந்தனர். 2010-11 ம் ஆண்டில் 15.59 லட்சம் மாணவர்கள் பயனடைவார்கள் என்றுஎதிர்பார்க்கப்பட்டது.

Popular Feed

Recent Story

Featured News