மத்திய அரசிற்கு உட்பட்ட தேசிய தானியங்கி சோதனை மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் காலியாக உள்ள மேலாளர், உதவி மேலாளர், பொறியாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கு பி.இ, பி.டெக் பட்டதாரிகள் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள். இப்பணியிடத்திற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.
நிர்வாகம் : தேசிய தானியங்கி சோதனை மற்றும் ஆராய்ச்சி நிலையம் (NATRIP)
மேலாண்மை : மத்திய அரசு
மொத்தக் காலிப் பணியிடம் : 14
பணியிடம் : சென்னை
பணி மற்றும் காலிப் பணியிட விபரங்கள்
மேலாளர் - 01
ஊதியம் : மாதம் ரூ. 56,100 முதல் ரூ.1,77,500 வரையில்
பொறியாளர் - 03
ஊதியம் : மாதம் ரூ.44,900 முதல் ரூ.1,42,400 வரையில்
உதவி மேலாளர் - 02
ஊதியம் : மாதம் ரூ. 53,100 முதல் ரூ.1,67,800 வரையில்
இளநிலை எலக்ட்ரிக் பொறியாளர் - 02
ஊதியம் : மாதம் ரூ. 35,400 முதல் ரூ.1,12,,400 வரையில்
மூத்த தொழில்நுட்ப உதவியாளர் - 03
ஊதியம் : மாதம் ரூ. 29,200 முதல் ரூ.92,300 வரையில்
இளநிலை பொறியாளர் - 03
ஊதியம் : மாதம் ரூ. 35,400 முதல் ரூ.1,12,400 வரையில்
கல்வித் தகுதி : மேற்கண்ட பணியிடங்களுக்கு முதுகலை பட்டம், பொறியியல் துறையில் பிஇ அல்லது பி.டெக், டிப்ளமோ முடித்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
வயது வரம்பு : விண்ணப்பதாரர் 30 முதல் 42 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
தேர்வு முறை : இப்பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை : தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் www.garc.co.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைன் அல்லது அஞ்சல் வழியாக விண்ணப்பிக்கலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:-
MANAGER (HR & ADMIN), NATIONAL AUTOMOTIVE TESTING AND R & D INFRASTRUCTURE PROJECT, NBCC PLACE, SOUTH TOWER, 3RD FLOOR, BHISHMA PITAMAH MARG, PRAGATI VIHAR, LODHI ROAD. NEW DELHI - 110003
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : 30.01.2020 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://www.garc.co.in/wp-content/uploads/2019/12/terms-and-conditions-phase-1-14-post.pdf?utm_source=DH-MoreFromPub&utm_medium=DH-app&utm_campaign=DH என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.