இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் தற்போது இந்தியா முழுவதும் வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் வரவேற்கப்படுகிறது. இந்த Trade Apprentice பணிக்கு மொத்தம் 248 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. எனவே அனைத்து விண்ணப்பதாரர்களும் 27.01.2020 அன்றுக்குள் ஆன்லைன் மூலம் அதிகாரப்பூர்வ இணையதளமான www.iocl.com விண்ணப்பிக்கவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ள கல்வி தகுதி மற்றும் வயது தகுதியினை நிறைவு செய்திருக்க வேண்டும். இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் எழுத்து தேர்வு மூலம் தேர்ந்தெடுப்பார்கள். இந்த எழுத்து தேர்வில் வெற்றி பெற்ற விண்ணப்பதாரர்கள் இந்தியாவில் எங்கு வேணாலும் பணியமர்த்தப்படுவார்கள்.
நிறுவனம்: Indian Oil Corporation Limited - Southern Region
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைவாய்ப்பு 2020
பணி:Trade Apprentice
பணியிடம்: தமிழ்நாடு & புதுச்சேரி 121 பேர், கர்நாடகா 78 பேர் , ஆந்திரா 27 பேர், தெலுங்கானா 22 பேர் என மொத்தம் 248 பேர் பணியமர்த்தப்படுவார்கள்.
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 13.01.2020
விண்ணப்பிக்க கடைசி தேதி: 27.01.2020
ஆன்லைன் டெஸ்ட் தேதி: 09.02.2020
கல்வி தகுதி; அங்கீகரிக்கப்பட்ட குழு அல்லது பல்கலைக்கழகத்திலிருந்து விண்ணப்பதாரர்கள் Matric/ ITI படித்தவர்கள் இந்த வேலைவாய்ப்பு காலியிடத்திற்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.
வயது தகுதி; விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயது 18 ஆண்டுகள் முதல், அதிகபட்ச வயது 24 ஆண்டுகளுக்குள் இருக்க வேண்டும். வயது தளர்வு பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள கீழ்
தேர்ந்தெடுக்கும் முறை; எழுத்து தேர்வு மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்ப முறை:- IOCL வேலைவாய்ப்பு காலியிடத்திற்கு (iocl recruitment 2019) விண்ணப்பிக்கும் முறை:
www.iocl.com என்ற இணையதள லிங்கை கிளிக் செய்யவும். அவற்றில் 'Notification for Engagement of Trade Apprentices under the Apprentices Act , 1961 at IOCL-Southern Region (MD) என்ற அறிவிப்பு விளம்பரத்தை தேர்வு செய்யவும். பின் அறிவிப்பு விளம்பரத்தை கவனமாக படித்து தகுதியை சரிபார்க்கவும்.
தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்ப படிவத்தில் தேவையான ஆவணங்களை இணைத்து விண்ணப்ப படிவத்தை பதிவு செய்யவும்.கடைசியாக பதிவு செய்த விண்ணப்ப படிவத்தை ஒரு ப்ரிண்ட் அவுட் எடுத்து கொள்ளவும்.