Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Saturday, January 18, 2020

டி.என்.பி.எஸ்.சி...! ரத்தாகிறதா குரூப் 4 தேர்வு...?


கடந்தாண்டு நடந்த குரூப் 4 தேர்வில் முறைகேடு குற்றச்சாட்டு எழுந்த நிலையில், விசாரணைகள் முடிவுற்று சில நாட்களில் டி.என்.பி.எஸ்.சி முக்கிய அறிவிப்பை வெளியிடலாம் என்று தகவல்கள் கூறுகின்றன.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் குரூப் 4 தேர்வு நடைபெற்றது. இதன் முடிவுகள் நவம்பர் மாதம் வெளியாயின.




இந்நிலையில் குரூப் 4 தேர்வில் முறைகேடுகள் நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து ராமேஸ்வரம் மற்றும் கீழக்கரை தேர்வு மையங்களில் தேர்வு எழுதிய 35 பேரிடம் டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.அவர்களில் பலரிடம் சில மணி நேரத்தில் விசாரணை முடிவடைந்த நிலையில், சிலரிடம் விடிய விடிய விசாரணை நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. 19 மணி நேரம் நீடித்த இந்த விசாரணையில் தேர்வில் முறைகேடுகளில் ஈடுபட்டது யார் யார் என கண்டறியப்பட்டுள்ளதாக தெரிகிறது. இவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் பட்சத்தில், யாராவது நீதிமன்றம் சென்றால் தேர்வை ரத்து செய்ய நீதிமன்றம் கட்டாயமாக உத்தரவிடும் நிலை உள்ளது.




இதனால், குரூப் 4 தேர்வை ரத்து செய்வது தொடர்பாகவும் டி.என்.பி.எஸ்.சி உயரதிகாரிகள் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். இன்னும், சில நாட்களில் முக்கிய அறிவிப்பு வெளியாகும் என்று டி.என்.பி.எஸ்.சி வட்டாரம் உறுதியாக கூறுகிறது.முறைகேடு புகாரால் தேர்வு ரத்து செய்யப்பட்டால், வரும் காலங்களிலும் தேர்வாணையத்தின் மீது சந்தேகப் பார்வை எழும் என்பதால், எதிர்காலங்களில் தேர்வு விதிமுறைகளை தேர்வாணையம் கடுமையாக்க வேண்டும் என்று அரசுத்தேர்வுகளுக்கு தயாராகிவரும் தேர்வர்கள் கூறுகின்றனர்.

Popular Feed

Recent Story

Featured News