Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Wednesday, January 8, 2020

பொதுத்தேர்வு எழுதும் 5-8 வகுப்பு மாணவர்களின் விவரங்களை அனுப்ப தேர்வுத்துறை உத்தரவு

தமிழகத்தில் 5ம் வகுப்பு மற்றும் 8ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் விவரங்களை அனுப்ப தேர்வுத்துறை உத்தரவு.
மாவட்ட முதன்மை மற்றும் அனைத்து கல்வி அலுவலர்களுக்கு இந்த அறிவிப்பை பள்ளிக்கல்விதுறை அறிவித்துள்ளது.
தமிழகத்தில் அரசு மற்றும் அரசுசாரா பள்ளிகளில் தற்போது வரை 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பிற்கு மட்டும் பொதுத்தேர்வு நடைபெற்று வரும் நிலையில், தமிழக அரசு 5 மற்றும் 8 வகுப்புகளுக்கும் இனி பொதுத்தேர்வு என்ற அறிவிப்பை வெளியிட்டது.



இந்த அறிவிப்பால் பெற்றோர்கள் மற்றும் கல்வியாளர்கள் எல்லோரும் இந்த தேர்வானது மாணவர்களின் இடைநிற்றலை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என்றும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பொதுத்தேர்வு மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்தவே நடத்தப்படுவதாகவும், இது குறித்து மாணவர்களோ அவர்களின் பெற்றோர்களோ அச்சம் அடைய தேவையில்லை என்று தெரிவித்தார்.
இந்நிலையில் பள்ளிகளில் பயிலும் 5ம் மற்றும் 8 ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும் என்று தெரிவித்திருந்த பள்ளிக்கல்வித்துறையின் தற்போது அதற்கான நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது.



அதன்படி மாவட்ட முதன்மைக் கல்விஅலுவலர்களுக்கு இந்த உத்தரவினை அறிவித்து கெடு வித்துள்ளது.அந்த கெடுவில் பொதுத்தேர்வு எழுதும் 5 வகுப்பு மற்றும் 8 வகுப்பு மாணவர்களின் விவரங்களை வருகின்ற 10 தேதிக்குள் அனுப்ப வேண்டும் என்று தெரிவித்துள்ளது. மேலும் 5 மற்றும் 8 வகுப்பு பொதுத்தேர்வுகள் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதத்தில் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Popular Feed

Recent Story

Featured News