Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Tuesday, January 21, 2020

5, 8ம் வகுப்பு பொது தேர்வுக்கு 'சென்டர்' அமைப்பதில் குழப்பம்

சென்னை:ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கான பொது தேர்வுக்கு, பிற பள்ளிகளில் தான் தேர்வு மையங்கள் அமைக்கப்பட வேண்டும் என, தொடக்க கல்வி இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.ஆனால், அதே பள்ளியில் தான் தேர்வு மையங்கள் இருக்கும் என, அமைச்சர் அறிவித்து உள்ளார். மத்திய அரசின் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி, 2019 மார்ச் வரை, அனைத்து மாநிலங்களிலும், எட்டாம் வகுப்பு வரை, 'ஆல் பாஸ்' என்ற, அனைவரும் தேர்ச்சி முறை பின்பற்றப்பட்டது.



திணறும் நிலைபல மாநிலங்களிலும், பல பாடத்திட்டங்களிலும், எட்டாம் வகுப்பு வரை மாணவர்களுக்கு தேர்வுகளே நடத்தப்படாமல் உள்ளன.இதனால், ஒன்பதாம் வகுப்புக்கு வரும் மாணவர்கள் பலர், தாய்மொழியில் எழுத, படிக்க கூட திணறும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து, அனைத்து மாநிலங்களிலும், ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கு, பொது தேர்வை நடத்தலாம் என்றும், இதுகுறித்து, மாநிலங்கள் முடிவு செய்யலாம் என்றும், மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் தெரிவித்தது. இதை அமல்படுத்தும் வகையில், தமிழக அரசு மட்டும், ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கு, பொது தேர்வு நடத்தப்படும் என, அறிவித்தது. இந்த பொது தேர்வை, 10ம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 போன்று, அரசு தேர்வு துறை வழியாக, கட்டுப்பாடுகளுடன் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.



இது குறித்து, கடும் கட்டுப்பாடுகள் அடங்கிய, ஆறு பக்க சுற்றறிக்கையை, பள்ளிகளுக்கு தொடக்க கல்வி இயக்குனரகம் அனுப்பியுள்ளது. அதில், மாணவர்கள் தேர்வு எழுதும் மையங்களை, பிற பள்ளிகளில் அமைப்பது தொடர்பாக, சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. குழப்பம்'மாணவர்கள் படிக்கும் பள்ளிகளில் இருந்து, ஒரு கி.மீ., தொலைவிற்குள், ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கும், 3 கி.மீ., துாரத்துக்குள், எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கும் தேர்வு மையம் அமைக்க வேண்டும்.'அரசு பள்ளிகள் மட்டுமின்றி, மெட்ரிக் பள்ளிகள், ஆங்கிலோ இந்தியன் பள்ளிகளையும் தேர்வு மையம் அமைக்க பயன்படுத்தலாம்' என, அதில் கூறப்பட்டுள்ளது.



அதேபோல், தேர்வில் மாணவர்கள், 'காப்பி' அடிக்காத வகையில், வினாத்தாள் கட்டுகளை மிகவும் பத்திரமாக கையாள வேண்டும்; வினாத்தாள் எந்த வகையிலும், 'லீக்' ஆகி விடக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.இந்நிலையில், அமைச்சர் செங்கோட்டையன் அளித்துள்ள பேட்டி, குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.ஐந்து, எட்டாம் வகுப்பு பொது தேர்வுக்கு, பிற பள்ளிகளில், தேர்வு மையங்கள் அமைக்கப்படாது என்று கூறியுள்ளார்.ஆனால், அதற்கு நேர்மாறாக, தொடக்க கல்வி இயக்குனரகம்சுற்றறிக்கை அனுப்பியுள்ளதால், பெற்றோரும்,ஆசிரியர்களும் குழப்பத்தில் உள்ளனர்.

Popular Feed

Recent Story

Featured News