Join THAMIZHKADAL WhatsApp Groups
தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு கட்டாய ஓய்வு அளிக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக வெளிவந்துள்ள செய்தியால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 50 வயது நிறைவு மற்றும் 30 ஆண்டுகள் பணி நிறைவு பெற்று, பணியில் தொடரும் அரசு ஊழியர்களுக்கு உடனடியாக கட்டாய ஓய்வு அளிக்க தமிழக அரசு ஆணை வெளியிட்டுள்ளதாக வெளிவந்துள்ள செய்தியால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது இதுகுறித்து ஏற்கனவே சுற்றறிக்கை அனுப்பப்பட்டிருந்த நிலையில் தற்போது அரசு ஆணையே வெளியாகியுள்ளதால் தமிழக அரசு ஊழியர்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆனாலும் தமிழக அரசின் ஆணை வழக்கமான அரசாணை தான் இது என அரசு ஊழியர் சங்கம் விளக்கம் அளித்துள்ளது